கோவை கிராம ஊராட்சி ரோடுகள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க ஆய்வு…

கிராம ரோடுகள் மாநில நெடுஞ்சாலை வசம் விரைவில் ஒப்படைப்பு கோவை, அக். கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பிரதான ரோடுகள், மாவட்ட ரோடுகள், இதர கிராம சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து குறிப்பிட்ட சில பகுதி ரோடுகள் மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்து மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் விரைவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது. கோவை மாவட்ட த்தில் ஊராட்சி பகுதிகளில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளில் குறிப்பிட்ட சில பகுதியை மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆய்வு பணி இன்றுநடந்தது.

சூலூர் கருமத்தம்பட்டி கனியூர் நீலாம்பூர் கிணத்துக்கடவு செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுஜாதா மற்றும் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முருகன் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 33 கிராம பகுதிகளில் உள்ள சுமார் 60 கிலோ மீட்டர் தூர ரோடுகளை நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்க ஆலோசிக்கப்பட்டது. இதில் பஸ் ஸ்டாண்ட், பிரதான ரோடு சந்திப்பு, பைபாஸ் ரோடு சந்திப்பு மற்றும் வரும் காலங்களில் விரிவாக்கப்படும் ரோடுகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ரோடுகள் முறைப்படி நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டால் அந்த ரோட்டை விரிவாக்கம் செய்து கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

கிராம ஊராட்சிகளின் ரோடுகளை தங்கள் வசம் ஒப்படைத்தால் சீரமைப்பு பணி நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும். உள்பகுதியில் உள்ள ரோடுகளை எடுத்து பராமரிக்க இயலாது என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகளவு ரோடுகள் உள்ளாட்சி வசம் இருந்தது. இதில் முக்கிய ரோடுகள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக நெடுஞ்சாலைத்துறை அதிகளவு ரோடுகளை தங்கள் வசம் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வரும் காலங்களில் உள்ளாட்சிகளின்பணி சுமைகளை குறைத்து நெடுஞ்சாலை துறையில் ரோடுகளை தரமாக பராமரிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

3 thoughts on “கோவை கிராம ஊராட்சி ரோடுகள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க ஆய்வு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *