வெற்றி பயணம் திட்டம் கோவையில் நாளை தொடக்கம்…

தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் வெற்றி பயணம்’ திட்டத்தை நாளை துவங்கி வைக்கிறார்.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் திட்டத்தை அமைச்சர்கள் காந்திபுரம் பஸ் நிலையத்தில் துவக்கி

வைக்கவுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவை,

ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை மண்டலங்களில் வெற்றி பயணம் திட்டம் தொடர்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் பேருந்துகள் இயக்கப்பட உள்ள வழித்தடங்கள், பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் இயக்கம் தொடர்பான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோருக்கு திட்டத்தின் வழிமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெண்களுக்கான இலவச பயண வெற்றி பயணம்

திட்டத்தின் மூலம் 602 டவுன் பஸ் மற்றும் 188 மப்சல் பஸ்கள் என மொத்தம் 790 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களில் பெண்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்களில் வெற்றி பயண திட்டம் என அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.

மேலும், வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பஸ்களில் எதுபோன்ற அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் மற்றும் ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும் போன்ற அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. இது தொடர்பாக அறிவிப்புகள் வந்தவுடன் பஸ்களில் ஓட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 thoughts on “வெற்றி பயணம் திட்டம் கோவையில் நாளை தொடக்கம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *