காதல் மனைவி பிரிவு வாலிபர் தற்கொலை…
சிறுவர் காதல் திருமணத்தை பிரித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், தொட்டறூத்து அச்சராக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ்கண்ணன் (21). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இருவரும் சிறு வயது என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து திண்டுக்கலில் உள்ள சனார்பட்டி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் தொடர்ந்து போலீசார் இருவரும் திருமண வயது வரும் வரை அவரவர் பெற்றோரிடம் தான் இருக்க வேண்டும் என பிரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால், ரதீஷ்கண்ணன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ரதீஷ்கண்ணன் வேலை தேடி கோவைக்கு வந்துள்ளார். கோவையில் சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள ஜி.என். மில்ஸ், அறிஞர் அண்ணா நகரில் வசித்து வரும் தனது அண்ணன் சதீஷ்குமார் (25) என்பவருடன் தங்கியிருந்தார்.
தொடர்ந்து பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சதீஷ்குமார் தூங்கி விழித்து பார்த்தபோது, தனது தம்பியின் அறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். உடனே அவர் சென்று கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் அவர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தார்.
அப்போது, ரதீஷ்கண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரதீஷ்கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The graphics and sound effects on this site are amazing. It makes the whole experience much more immersive. Highly suggest visiting phgamephp for some high quality gaming.
If you are looking for a VIP experience with great perks, this is the spot. The service at f1685vip is just on another level.