இருட்டில் வர்ற யானைகள் தெரியறதில்ல… பொதுமக்கள் புகார்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
இதில் கோவைப்புதூர் சிபிஎம் கல்லூரி ரோடு அக்சயா லே அவுட் பகுதி மக்கள் அளித்த மனுவில், “மேற்கு தொடர்ச்சி எல்லையில் அமைந்த எங்கள் ஏரியாவில் தெரு மின் விளக்கு அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் இந்த பகுதி எப்போதும் இருட்டாக இருக்கிறது. இருட்டு பயத்தில் பலர் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை.
வன விலங்குகள் குறிப்பாக யானைகள் இங்கே வந்தால் கூட யாருக்கும் தெரியாத நிலைமை தான் இருக்கிறது. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் தொல்லையும் அதிகமாகி விட்டது. எனவே, குடியிருப்பு பகுதிகளுக்கு தெரு விளக்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோடு அமைக்காமல் இங்கே வெறும் மண் பாதை தான் இருக்கிறது. அதுவும் குழியும் மேடுமாக மாறி விட்டது தார் அமைத்து தர வேண்டும்” என தெரிவித்தனர்.
அம்பேத்கார் மக்கள் விடுதலை கழக தலைவர் ரங்கநாதன் அளித்த மனுவில், “அரசூர் கொள்ளுபாளையம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஒருவர் கம்பி வேலி அகற்றி அபகரித்துள்ளார். இந்த இடத்தை மக்கள் மீட்க முயன்ற போது அந்த நபர் மிரட்டல் விடுத்து வருகிறார். தன்னை மந்திரவாதி எனக்கூறி அவர் மிரட்டி வருவதாக தெரிகிறது.
அவரின் அடாவடியால் அந்த பகுதி மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள். எனவே கோயில் நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும். அடாவடி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சத்தி புளியம்பட்டி பகுதியை சேர்ந்த அங்கத்தாள் அளித்த மனுவில், “என் தாத்தா அங்கவண்ணன் அன்னூர் பிள்ளையார்புரத்தில் வாழ்ந்தார். இவர் 1930ம் ஆண்டு இறந்து விட்டார். இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதை நாங்கள் வாரிசு முறையில் பகிர்ந்து கொள்ள திட்டமிட்ட போது வருவாய்த்துறையில் இறப்பு சான்று கேட்கிறார்கள். 96 ஆண்டிற்கு முன் இறந்தவருக்கு எப்படி இறப்பு சான்று கேட்டு தாசில்தார், ஆர்டிஓ அலுவலகத்தில் மனு கொடுத்தோம். எந்த பதிலும் தரவில்லை. எங்களுக்கு இறப்பு சான்று தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
புலியகுளம் அலமேலு மங்கம்மாள் லே அவுட் சுந்தரமூர்த்தி அளித்த மனுவில், “நான் வீட்டு வசதி வாரியத்தில் மனை கேட்டு 1.50 லட்சம் ரூபாய் கட்டினேன். ஆனால், என் பெயருக்கு வர வேண்டிய வீட்டு மனை பத்திரம் வேறு நபருக்கு தவறுதலாக பதிவாகி விட்டது. முறையாக பணம் கட்டிய எனக்கு வீட்டு மனை வழங்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இடிகரை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் அளித்த மனுவில், “நாங்கள் 40 ஆண்டாக வசித்து வந்த வீடு பழுதடைந்து விட்டது. இந்த வீட்டை இடித்து கட்ட முயன்ற போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் 3 பேர் எங்களை வீடு கட்ட கூடாது என மிரட்டல் விடுகிறார்கள் வீட்டை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Best app I’ve used for this kind of thing in a while. The updates are frequent and the bonuses are actually useful. See you all at br567winapp.
I’ve tried a few platforms lately, but the gameplay here is surprisingly smooth. The bonuses are actually fair and easy to claim. Highly recommend checking out mumu86slot for a great session.
I have tried many sites but this one actually delivers on its promises. The withdrawal process is fast and transparent. I am really happy with the results. Join vnm99win today.