ரூ.700 கோடி சின்னியம்பாளையம் நீலாம்பூர் மேம்பாலம் திட்டத்தில் மாற்றம்…
கோவை அவிநாசி ரோட்டில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜிடி நாயுடு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
1791 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நான்கு வழி பாதையாக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மேம்பாலத்தின் தொடர்ச்சியாக சின்னியம்பாளையம் கோல்டு வின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை 5.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த மேம்பாலத்தை நான்கு வழி பாதையாக ஏற்கனவே ஜிடி நாயுடு மேம்பாலம் கட்டப்பட்டது போல் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு ஏற்கனவே விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டது.
விரைவில் டெண்டர் விட்டு பணிகளை துவக்க ஏற்பாடு செய்து வந்தனர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த மேம்பாலம் கட்டும் பணிக்கு விரைவில் டெண்டர் விட ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் நடக்க உள்ள நிலையில் புதிய மேம்பாலம் அமைக்க தடை ஏற்பட்டுள்ளது. பீளமேடு சித்ரா பகுதி வழியாக விமான நிலையம் செல்ல பிரதான பாதை இருக்கிறது. இந்த பாதைக்கு மாற்றாக வேறு பாதை உருவாக்கப்படவுள்ளது.
நீலாம்பூர் பகுதியில் லீ மெரிடியன் ஹோட்டல் அருகே விமான நிலையத்திற்கு புதிய நுழைவாயில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் புதிய விமான நிலைய நுழைவு பாதை அமைக்கப்பட்டால் அங்கு வாகனங்கள் ஏறி இறங்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, புதிதாக அமைய உள்ள மேம்பாலத்தில் ஏறி இறங்கு தளம் அமைக்க வேண்டும்.
இந்த பணிகளை சேர்த்து புதிய திட்டம் தயாரிக்க வேண்டும். இந்த கூடுதல் ரேம்ப் உடன் மேம்பாலம் கட்டும் பணிக்கு கூடுதல் தொகை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திட்ட மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்து கூடுதல் பணி விவரங்களுடன் மீண்டும் திட்ட வரைவு தயாரித்து அனுப்புவதற்கு நெடுஞ்சாலைக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
இது தவிர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு விரிவாக்கம் செய்வதற்காக நீலாம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வசம் உள்ள குறிப்பிட்ட சில பகுதி இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டு இருக்கிறது. அதேபோல் விமான நிலைய ஆணையகமும் தேசிய நெடுஞ்சாலை வசம் உள்ள 10 ஏக்கர் நிலத்தை விமான நிலைய நுழைவு பகுதிக்கு பயன்படுத்த வேண்டும் என கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
இடவிவகாரம், திட்ட மாற்றம் போன்றவற்றினால் சின்னியம்பாளையம் நீலாம்பூர் மேம்பாலம் திட்டம் தாமதமாகி வருகிறது. இதேபோல் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு திட்டமும் முடங்கி போய் கிடக்கிறது
விமான நிலைய விரிவாக்க பணிகளும் இடம் கிடைக்காமல் தாமதமாகி வருகிறது. 3 திட்ட பணிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பதால் கூடுதல் சிக்கல் நிலவுகிறது. பொதுமக்கள் கோவை நகரின் முக்கிய போக்குவரத்து கிட்டங்கள் முடங்கியதால் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Been playing here for a couple of weeks and the win rate seems fair compared to other sites. idmc888 is definitely worth a try for serious players.
I really appreciate the transparency of this platform. No hidden fees and the withdrawal process is straightforward. istanaimpian1login is top tier.
Really impressed with the variety of games here. It is refreshing to find a site that actually pays out on time. Cheers to bdkhela888 for the awesome service.
Finally found a spot that actually pays out on time. The interface is clean and not cluttered with useless ads. I’m really enjoying my time here so far. Visit jjjwin today.