டைமிங் இன்றி இயக்கப்படும் அரசு பஸ்கள்
கோவை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் 43 கிளை அலுவலகங்கள் மூலமாக பல ஆயிரம் பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது.
சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்கள் போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான டவுன்பஸ்கள் காலை 4.30 மணி முதல் 7 மணி வரையில் கிளை அலுவலக டெப்போக்களில் இருந்து வெளியே புறப்பட்டு செல்கிறது. சில பஸ்கள் உரிய நேரத்தில் டெப்போக்களில் இருந்து வெளியே செல்வதில் (ஷெட் அவுட்) தாமதம் நீடிப்பதாக தெரிகிறது.
பஸ்களை உரிய நேரத்தில் இயக்காததால் டைமிங் பிரச்னை ஏற்படுவதாக கூறப்படுகிறது பள்ளி மாணவ மாணவிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நீண்ட காலமாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. பஸ்களை டெப்போவில் இருந்து வெளியே எடுக்க இதில் 10 முதல் 20 நிமிடம் வரை அவகாசம் வழங்கப்பட்டும் தாமதம் நீடிக்கிறது.
பஸ்களில் ஏற்படும் பழுது, டிரைவர் கண்டக்டர் பற்றாக்குறை காரணமாக தினமும் 60 முதல் 70 பஸ்கள் இயக்கப்படாமல் கிளை அலுவலக ஷெட்டில் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இயங்காத பஸ்களால் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு அதிகரித்து வருகிறது. சில பஸ்களை பழுதுபார்ப்பதாக கூறி பல நாட்களாக இயக்கத்திற்கு அனுப்பாமல் நிறுத்தி வைப்பதும் நடக்கிறது.
டைமிங் இன்றி சில அரசு டவுன்பஸ்கள் ஒரே நேரத்தில் சென்று வருவதாகவும் புகார் பெறப்பட்டிருக்கிறது. சில பணிமனை நிர்வாகத்தினர், பழுதுடன் பஸ்களை ஓட்ட அனுமதிப்பதாக தெரிகிறது. விபத்து ஏற்படும். அபாயம் இருந்தும் பஸ்களை பழுதுடன் இயக்கத்திற்கு அனுப்புவது தொடர்கிறது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவேண்டும்.
பழுது நீக்கும் பணிகளை முறையாக செய்யவேண்டும். பயன்பாடின்றி பஸ்களை ஷெட்டில் பல நாட்கள் நிறுத்தி வைப்பதை தவிர்க்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

This app is a game changer! I love how I can play on the go and the payouts are quite fair. Try jljl99app if you want a decent experience.