கொட்டுது மழை குடிநீரை கொதிக்க வைத்து குடியுங்க…

கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.

பவானி, பில்லூர் நீர் தேக்க பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குடிநீர் செந்நிறமாக மாறி விட்டது. குடிநீரை சுத்தம் செய்து தெளிவித்து சப்ளை செய்யாமல் கலங்கலாக அப்படி அனுப்புவதாக தெரிகிறது. இதை தெளிவிக்க படிகாரம் கலப்பு பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

தினமும் 13 கோடி லிட்டர் பில்லூர் குடிநீர் கோவை நகர், புறநகருக்கு சப்ளையாகிறது. இந்த குடிநீரின் தரம் மோசமாக இருப்பதாக மக்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள். சிறுவாணி பில்லூர், பவானி, ஆழியாறு போன்ற நீர் திட்டங்களில் இருந்து பிரதான குழாயில் சப்ளையாகும் குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டுள்ளதா?, மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளின் மூலமாகவும், நில மட்ட நீர் தேக்க தொட்டிகளில் சேகரித்தும் சப்ளையாகும் குடிநீர் தரமாக உள்ளதா? என ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

குடிநீரை பரிசோதனை ஆய்வகங்களில் நீர் மாதிரி சோதனை நடத்தி கண்காணிக்கும் பணி நடக்கிறது.

குடிநீர் சுத்தம் செய்தும் அது செந்நிறமாக சப்ளையாகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள் போதுமான அளவு குளோரின் கலக்க வேண்டும். நீரில் சேறு சகதி இருப்பதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். மழை நீர் வெள்ளத்தை குடிநீராக பயன்படுத்தும் போது அதனால் நோய் பரவல் ஏற்படக்கூடும். எனவே குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து பயன்படுத்தலாம். இதன் மூலமாக நோய் பரவல் தவிர்க்கப்படும் என சுகாதார துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

One thought on “கொட்டுது மழை குடிநீரை கொதிக்க வைத்து குடியுங்க…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *