கோவையில் வட மாநில வாலிபரிடம் பணம் பறிக்கும் போதை கும்பல் வீடியோ…
கோவை வெரைட்டிஹால் ரோட டாஸ்மாக் கடை அருகே வடமாநில வாலிபர் ஒருவர் போதையில் படுத்திருந்தார். அவரை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் பாக்கெட்டில் கை விட்டு பணம் உள்ளதா? என பார்த்தனர். அப்போது படுத்து தூங்கிய அந்த வாலிபர் எழுந்தார். அவரை 3 பேரும் மடக்கி பிடித்தனர். அவரை எழ விடாமல் தடுத்து பணம், செல்போன், பர்சை பறிக்க முயன்றனர்.
ஆனால், அந்த வாலிபர் தொடர்ந்து திமிறியபடி அவர்களின் பிடியில் இருந்து தப்பினார். அக்கம் பக்கத்தினரிடம் என்னிடம் திருடறாங்க, உதவி செய்யுங்க என அவர் இந்தியில் பரிதாபமாக கேட்டபடி அங்கேயிருந்து சென்றார். பட்ட பகலில் போதை வாலிபரிடம், போதை கும்பல் மது, கஞ்சா வாங்குவதற்காக போலீஸ் ஸ்டேஷன் அருகே துணிச்சலாக வழிப்பறி செய்த வீடியோ பதிவு வெளியானது.
இந்த வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது. கோவையில் இருப்பவர்கள் இப்படி வேலை செய்து
பிழைக்காமல் பஞ்சம் பிழைக்க வந்த வடமாநிலத்தினரிடம் வழிப்பறி செய்து பிழைப்பது கேவலம், இவங்கள சும்மா விடக்கூடாது என சமூக வலை தளங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். உழைத்து பிழைக்காமல் பிளாட்பாரவாசிகளிடம் பிடுங்கி சாப்பிடும் கேடு கெட்ட மக்கள். இவர்களை போலீசார் விடக்கூடாது. பணம், செல்போன் தராவிட்டால் தாக்குதல் நடத்துகிறார்கள். பொதுமக்கள் பார்க்கும் போதே இப்படி துணிந்து செய்யும் நபர்களை விடக்கூடாது, போலீசார் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

The app installation was seamless and the performance is top-notch. No lags during the big wins which is exactly what I need. Download it via jili979download.