சாதி டார்ச்சரில் மாணவர் தற்கொலை… மழையில் 5 நாள் போராட்டம்
பள்ளி மாணவன் தற்கொலை விவகாரத்தில் குடும்பத்தினர், பல்வேறு அமைப்பினர் கொட்டும் மழையிலும் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, பீளமேடு, கொடிசியா அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த பிளஸ் – 1 மாணவன் அகிலன், கடந்த 21ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவன் அகிலன் தற்கொலை செய்ததற்கு அவர் படித்து வந்த பள்ளியில் நடந்த சாதிய கொடுமை தான் காரணம் என்று அவரது பெற்றோர் அசோக்குமார் கவுசல்யா தேவி பீளமேடு போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் வகுப்பு ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரிபர் அருண்குமார் மற்றும் சக மாணவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து 16 வயது மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ள மாணவன் அகிலன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது குடும்பத்தினர் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அவர்களுக்கு கோவையில் உள்ள 10க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் நேற்று கொட்டும் மழையிலும் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

I really appreciate the stability of this site. No more annoying crashes during big wins. Just a solid and trustworthy platform at jilimaxlogin.