முதியோர் உதவித்தொகை நிறுத்தியதாக கோவை கலெக்டர் ஆபீசில் புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
இதில் கலெக்டர் பவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொண்டாமுத்தூர் காளியண்ணன்புதூர் மல்லிகை நகரை சேர்ந்த சித்ராதேவி என்பவர் அளித்த மனுவில், “எனது கணவர் சில ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வறுமை நிலையில் கூலி வேலை செய்து நான் வாழ்க்கை நடத்தி வருகிறேன்.
எனக்கு எந்த ஆதரவும் இல்லை. என் பெற்றோர் மாற்றுத்திறனாளி. கணவர் வீட்டார் ஆதரவு இல்லை. நான் இதே பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீட்டில் வசிக்கிறேன். என் வீட்டின் அருகே வசிப்பவர்கள் பட்டா வாங்கி விட்டார்கள். எனக்கு இலவச மனை பட்டா வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்கி உதவி செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.
போத்தனூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் தனது 3 வயதான கழுத்து தலை செயல்படாத விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட மகனுடன் வந்து மனு அளித்தார். வறுமையில் வாழ்வதாகவும் இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை மனு அளித்தார். ஈரோடு அரக்கன் கோட்டை பகுதியை சேர்ந்த குணசேகரன் தனது மனைவியுடன் வந்து அளித்த மனுவில்,
” திருமணமாகி 14 ஆண்டாகிறது. எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. காப்பகத்தில் உள்ள குழந்தையை முறைப்படி எங்களுக்கு தத்து கொடுக்க வேண்டும். இதற்கான நிபந்தனைகளை ஏற்கிறோம். உரிய அனுமதி எங்களுக்கு கிடைக்கவில்லை. ” என தெரிவித்தனர்.
சூலூர் செகுடந்தாளி குமாரசாமி என்ற மாற்றுத்திறனாளி தனது மொபட்டை திருடி சென்று விட்டார்கள். இந்த நிலையில் வாகனம் கேட்டு விண்ணப்பித்தேன். எனக்கு வாகனம் தரவில்லை.ரயில் நிலையம் முன் நிறுத்தப்பட்ட என் வாகனத்தை கண்டு பிடித்து தரவில்லை. ” என்றார் கெம்பட்டி காலனி பாபு என்பவரும் மாற்று திறனாளிகளுக்கான சைக்கிள் கேட்டு விண்ணப்ப மனு அளித்தார்.
வடவள்ளி சிறுவாணி ரோடு பகுதியை சேர்ந்த மணி (72) என்பவர் நடக்க முடியாமல் வந்து அளித்த விண்ணப்ப மனுவில், ” எனது மகன் என்னையும் எனது மனைவியும் தாக்கி துன்புறுத்தி வருகிறார். நான் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகன் தாக்கியதால் என்னால் நடக்க முடியவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறேன். வீட்டில் வசிக்க விடாமல் அவர் தொந்தரவு செய்கிறார். எனக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டு இருக்கிறேன். அந்த வீடுகளில் யாரும் வசிக்க விடாமல் அவர் டார்ச்சர் செய்கிறார். என் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தின் பவ்வேறு பகுதியில் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டதாக கூறி புகார் மனு அளித்தனர். சூலூர் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள், ஆர்எஸ் புரம் மாகாளியம்மாள் தனக்கு 6 மாதமாக உதவி தொகை வரவில்லை. சாப்பாட்டிற்கு வழியின்றி தவிக்கிறோம் என கண்ணீர் விட்டு கதறினர். இவரை போல் மேலும் சில பெண்கள் முதியோர் உதவி தொகை கிடைக்கவில்லை என கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Solid platform with a very modern feel. I love how easy it is to navigate through the menu. Big thumbs up for 7788bet7788bet9.