கோவையில் பத்திர எழுத்தர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…
கோவை ரெட் பீல்ட் அருகே உள்ள பீளமேடு சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திர எழுத்தர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பீளமேடு கிளை தலைவர் பார்த்திபகுமார் தலைமை தாங்கினார்.செயலாளர் இளங்கோவன், பொருளாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக பத்திர பதிவுத்துறையில் 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளனர்.
இதில், 5 லட்சம் பத்திர எழுத்தர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.கடந்த 1865 ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவு துறையில் எழுத்தர்கள் மூலம் பத்திரப்பதிவு எழுத்துபணிகள் நடைபெற்றன. தற்போது அரசு இதை தனியார் துறைக்கு மாற்றி வருகிறது. ஈ டெண்டர் மூலம் தனியாருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.
ஆன்லைன் மூலம் நடைபெறும் முறையில் ஆள் மாறாட்டம் போலி பத்திரம் பதிவு போன்ற பல தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளன. மேலும் இதில் வாங்குபவர் மற்றும் கொடுப்பவர் பெயர்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. இதனால் முழு விவரமும் அதில் குறிப்பிடப்படுவதில்லை.இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மேலும், இதை தனியாருக்கு மாற்றுவதால் 5 லட்சம் பத்திர எழுத்தர்கள் குடும்பங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதில் பழைய நடைமுறையே தொடர தமிழக முதல்வர் விஜய், பத்திர பதிவுத்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
அப்போது பெண் ஊழியர்கள் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். பத்திர எழுத்தர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் பழனிச்சாமி, விஜய சந்திரன், சரஸ்வதி. பாக்கியலட்சுமி, செல்வராஜா, ராமதாஸ், சீனிவாசன், விஜயபாஸ்கர், அர்ஜுன், அரவிந்த், பிரேம். முத்துக்குமார், சண்முகம், வித்யா, அகிலா, உள்படை ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

If you are looking for a stable platform with great odds then this is it. I am really happy with the overall experience at bd4499bat.