கோவை மாவட்டத்தில் பார்த்தீனியம் செடிகள் அதிகரிப்பு

கோவை வனக்கோட்டத்தில் வன விலங்குகளின் நோய் தீர்க்கும் காற்றாழை, துளசி காணாமல் போனது. பார்த்தீனியம் செடி பரவலாசி விட்டது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் வன உயிரினங்களுக்கான உணவு தேவை குறைந்து வருகிறது.

யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய தோட்டங்களை தேடி உணவுக்காக வந்து செல்கின்றன. வனத்தில் வன விலங்குகளுக்கான உணவுகள் குறைந்து வருகிறது. குறிப்பாக யானைகள் விரும்பி சுவைக்கும் மூங்கில், அகில் அரிதாகி விட்டது. வனத்தில் பார்த்தீனியம் செடி பரவலாகி விட்டது. இதனால் துளசி, சோற்று கற்றாழை குறைந்து விட்டது.

வன விலங்குகளின் நோய் தீர்க்கும் இந்த தாவரங்கள் இல்லாததால் நோய் பாதிப்பு அதிகமாகி விட்டதாக தெரியவந்துள்ளது. வனத்துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்த கற்றாழை கோட்டம் மூடப்பட்டது. இதற்கு பிறகு, வனத்தில் கற்றாழை நடவு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

கற்றாழைகளை வனத்தில் பராமரிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கற்றாழை, துளசி நோய் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக யானைகளின் உடவில் உள்ள தட்டை புழு, உருளைப்புழு, ஈரல் புழுக்களை கொள்ளும் ஆற்றல் இவற்றிக்கு உண்டு.

வனத்தில் யானைகள் சாப்பிட துளசி, காற்றாழை இல்லாததால் குடலில் பல வித குடல் புழுக்களால் யானைகள் நோய் பாதிப்பில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்தில் பார்த்தீனியம் செடிகளை அழிக்க வனத்துறை நிர்வாகம் (முன் வரவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வனம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாய நிலம், பொது இடங்களில் பார்த்தீனியம் களை தாவரம் அதிகமாகி விட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த தாவரம் இந்தியாவில் பரவியிருப்பதாக தெரிகிறது.

இது மனிதர்கள், விலங்குகளுக்கு நோய் பாதிப்பை ஏற்படும். உடலில் பட்டால் கூட அரிப்பு ஏற்படும். இவற்றை முற்றிலும் அழிக்க வேண்டும். விவசாய தோட்டத்தில் உரமாக போட்டால் கூட முளைத்து வந்து விடும். ஆடு, மாடு சாப்பிட்டால் நோய் ஏற்படும். எனவே, இவற்றை முற்றிலும் அழிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

One thought on “கோவை மாவட்டத்தில் பார்த்தீனியம் செடிகள் அதிகரிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *