கோவையில் இருந்து தீபாவளிக்கு 2895 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

தீபாவளி பண்டிகை வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறையாக இருப்பதால், பண்டிகையை முன்னிட்டு கோவையில் தங்கி படிக்கும் கல்லூரி, பள்ளி மாணவர்கள், பணியாற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

இதையடுத்து, பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில், கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம், மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையம் உக்கடம். பொள்ளாச்சி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து மொத்தம் 2,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

இதில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், அடுத்துள்ள தென்

மாவட்டங்களுக்கு செல்லும் 1210 பேருந்துகள், சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை காரைக்குடி கரூர் மார்க்கமாக செல்லும் 350 பேருந்துகள், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், திருப்பூர் செல்லும் 610 பேருந்துகள், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு செல்லும் 110 பேருந்துகள்,

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் செல்லும் 110 பேருந்துகள் சாய்பாபாகாலனி மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி, குன்னூர், கூடலூர் செல்லும் 195 பேருந்துகள், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் செல்லும் 310 பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சிங்காநல்லூர் மற்றும் சூலூர் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் பேருந்துகள் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து கோவைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பயணிகளை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மட்டுமே இறக்கிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற பேருந்து நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும்.

இந்த அனைத்து பேருந்து நிலையங்களிலும், பயணிகளுக்கு என குடி நீர் வசதி, கழிப்பிட வசதி, மழை காரணமாக பயணிகள் நிற்பதற்கு தற்காலிக கூடாரங்கள், மின்விளக்கு வசதி, சுகாதார வசதி ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், முன்கூட்டியே பயணச்சீட்டு பதிவு செய்த பயணிகளுக்கு முன்பதிவு இருக்கைகள் கொண்ட பேருந்துகளை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள எல்எஸ்ஐ மைதானத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *