கோவையில் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு: ரூ. 57 ஆயிரம் பறிமுதல்…

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலர் லஞ்சம் வாங்குவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில், கோவை புலியகுளத்தில் உள்ள மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் இன்று இரவு சென்றனர்.

அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் கோவையை சேர்ந்த ராமசாமி (45) என்பவர் அறைக்கு சென்று திடீரென்று அதிரடி நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த அலுவலகத்தில் அவருடைய அறையில் இருக்கும் மேஜையில் 6 கவர்கள் இருந்தது. அதற்குள் 57ஆயிரம் ரூபாய் இருந்தது, போலீசார் அந்த பணத்துக்கு கணக்கு கேட்டனர்.

ஆனால், அந்த பணத்துக்கு எந்த கணக்கும் இல்லை. எனவே, அது கணக்கில் வராத பணம் என்பதும். பொதுமக்களிடமும், வியாபாரிகளிடம் இருந்தும் லஞ்சமாக பெறப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராமசாமியிடம் இருந்து கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *