போலீசில் 13 வாகனங்கள் ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 8 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30.12.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும்.

. மேற்கண்ட 13 வாகனங்களும் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 29.12.2025 அன்று மாலை வரை வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் அவ்வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், 29.12.2025 அன்று மாலை 06.00 மணிக்குள் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.1000/- மற்றும் நான்கு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.2000/- முன்பணம் செலுத்தியும் தங்களது பெயரை கோவை மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவில் பதிவு செய்ய வேண்டும், ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST 18%) (இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்) முழுவதையும் அன்றே அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *