ரேஷன் கார்டு வேண்டுமா
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்துார் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன
. அதன் தொடர்ச்சியாக டிசம்பர்-2025 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் வருகின்ற 13.12.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கிவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
இந்த, குறைதீர் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசிஎண் மாற்றம், மற்றும் குடும்பத்தலைவர் புகைப்படம் மாற்றம், தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
