கஞ்சி சோறு, தண்ணி குழம்பு… அம்மா உணவகத்தில் அவலம்…!

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 15 அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது .‌ கோவை அரசு மருத்துவமனை வளாகம், காந்திபுரம், உக்கடம் , குனியமுத்தூர் , சிங்காநல்லூர் பீளமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது . கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவகங்கள் பழுதடைந்து அசுத்தமாக காணப்படுவதாக புகார் இருந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையினர் ஆய்வு நடத்தி அம்மா உணவகங்களை சீரமைக்க டெண்டர் விட்டு பணிகளை துவக்கி…

Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம் மூடல்…!

கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிக மழை பெய்து வருகிறது .சிறுவாணி சின்ன கல்லாறு சோலை ஆறு உடுமலை திருமூர்த்தி மலை பிஏபி பில்லூர் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. சிறுவாணி அடிவார வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. அருவி மற்றும் ஓடையில் நீர்வரத்து உச்சத்தை எட்டியுள்ளது . ஓடையில்…

Read More

Drugs in school: போதை பழக்கம் அதிகம் ;பள்ளி மாணவர்கள் கோவை கலெக்டரிடம் புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகளிடம் உங்களுக்கு போதைப் பொருள் மற்றும் கல்வி தொடர்பாக ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிக்கலாம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர். அப்போது மாணவ…

Read More

கோவையில் நெடுஞ்சாலை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு…

Chief reporter. kalaivanan 25/6/26.. 5 pm கோவை ரேஸ்கோர்ஸ் ஜிஎஸ்டி அலுவலகம் அருகே கோவை சரக மாநில நெடுஞ்சாலைத்துறை துணை கண்காணிப்பு பொறியாளர் நித்திலன் என்பவரின் குடியிருப்பு உள்ளது. இன்று காலை முதல் இவரது வீட்டில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். கடந்த 5 ஆண்டில் கோவையில் நடந்த கட்டுமானம், பராமரிப்பு பணி தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்தனர். நித்திலன் டெண்டர் விண்ணப்பங்கள், ஒதுக்கீடு பணிகளை கவனித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்…

Read More

கோவையில் சுடுகாட்டில் மீன் வியாபாரி சடலத்தை தோண்டி எடுத்து நகை திருடிய கில்லாடி கைது…

கோவை சௌரி பாளையம் உடையாம்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (63). கடந்த 6ம் தேதி உடல்நிலை பாதிப்பால் இறந்துவிட்டார். தொடர்ந்து அவரது மகன் வெங்கடேஷ் குமார் மற்றும் குடும்பத்தினர் சௌரி பாளையத்தில் உள்ள சுடுகாட்டில் அவரை அடக்கம் செய்தனர். அப்போது அவரது குடும்பத்தினர் விருப்பப்படி நாகராஜ் எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கும் மீன் டாலருடன் கூடிய 3.5 பவுன் தங்க சங்கிலியுடன் அவரை புதைத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி நாகராஜ் குடும்பத்தினர் அவருக்கு…

Read More

ITI admission… கோவை மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை

கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் அப்பேரல் தொடர்புடைய தொழிற்பிரிவுகள், டிரோன் பைலட், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு 2026 ம் ஆண்டிற்கான ஆன்லைன் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. 8, 10, 11, 12 ம் வகுப்பு மற்றும் டிகிரி, டிப்ளமோ படித்த 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் இப்பயிற்சியில்…

Read More

கோவையில் ஸ்டார்ட் அப் மண்டலம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில், உலகளாவிய முதலீடு மற்றும் ஸ்டார்ட் அப் சார்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பு மண்டலம் அமைத்தல், மேற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த சர்வதேச பூங்கா அமைத்தல், சரக்கு போக்குவரத்து கிடங்கு மற்றும் ஏற்றுமதி வசதிகள் ஒருங்கிணைத்தல்,…

Read More

Coimbatore Crime: கொலை, கொள்ளை தடுக்க போலீசார் அப்பார்ட்மெண்ட் விசிட்…

கோவை நகரில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் சப்ளை, சமூக விரோத செயல்கள் அதிகமாகி விட்டது. குடியிருப்பு மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. போத்தனூர் போலீசார், தங்களது எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மக்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது போலீஸ் தரப்பில், “பொது மக்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் எந்த விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் உடனடியாக சம்பவ…

Read More

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா: ரெய்டு நடத்துமா என்ஐபி…!?

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வாளையார் சின்னம்பதி பாரப்பட்டி நரசிபுரம் மாங்கரை ஆனைகட்டி தோலம்பாளையம் சிறுமுகை மேட்டுப்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனங்களில் கஞ்சா சாகுபடி நடக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது. மலைப்பகுதியில் கஞ்சா சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் இருப்பதாக தெரிகிறது. இங்கே ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்ப்பதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 30 முதல் 50 டன் எடையில் விதை நீக்கப்பட்ட உலர்ந்த தரம் பிரித்த கஞ்சா சேகரிக்கப்பட்டு வருவதாகவும்,…

Read More

தப்பு செஞ்சவங்க ஓட முடியாது ஒளிய முடியாது… கோவையில் அமைச்சர் வன்னி அரசு பேட்டி…

கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் இன்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆய்வு நடத்தினார். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதுஇது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு நிருபர்களிடம் கூறியதாவது மாணவிகளிடம் இருந்து புகார் வந்தது. அந்த அடிப்படையில் இங்கே சோதனை நடத்தப்பட்டது. உணவை சாப்பிட்டு பார்த்தோம். மாணவியர் தரப்பில் பஸ் வசதி வேண்டும் என கேட்டார்கள். விடுதிக்கு வரும் வழியில் உள்ள…

Read More