பிளேக் நோயில் கோவையை காவு வாங்கிய எலிகள் …
குறுநில மன்னர்களையும், மங்காத வளங்களையும் கண்ட கோவை, பேரழிவையும், பெரும் துன்பத்தையும் சந்தித்துள்ளது. கடந்த 1900ம் ஆண்டில் கோவையின் மக்கள் தொகை 40 ஆயிரம் ஆக இருந்தது. அப்போது கோவையில் 10 பெரிய கிணறுகள் இருந்தன. அந்த கால கட்டத்தில் சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டம் கிடையாது. கோவையை சுற்றி அதிகளவு குளங்கள் இருந்தன. தண்ணீர் தடையின்றி கிடைத்தாலும் கிணற்று நீரை தான் மக்கள் பிரதான குடிநீராக பயன்படுத்தி வந்தனர். குடிப்பது, துவைப்பது, ஆடு மாடுகளை குளிப்பாட்டுவது…
