கோவை திமுக நிர்வாகி பதவி ராஜினாமா..!
கோவை திருமலையம்பாளையம் திமுக நிர்வாகி ரமேஷ் குமார் திமுக பொதுச் செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; நான் திருமலையம்பாளையம் பேரூர்கழகத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக கழகப்பணி செய்துவருகிறேன். கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேரூர்கழக இளைஞரணி அமைப்பாளராக திறம்பட செயலாற்றி பல இன்னல்களை சந்தித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய பிரதிநிதியாக கழகம் அளித்த அனைத்து பணிகளையும் செய்துவருகிறேன். கடந்த 6 தேர்தல்களில் பாகமுகவராகவும், வாக்கு எண்ணிக்கை முகவராகவும் செயல்பட்டுள்ளேன். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பேரூராட்சி…
