கோவையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது துப்பாக்கி சூடு… இரண்டு பேர் கைது!

கோவை போத்தனூர் கஞ்சி கோணம்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியில் அறிமுகமான தவசி (28) சந்தோஷ் (24) ஆகியோர் கட்டாயப்படுத்தி சிறுமியை வாகனத்தில் அழைத்து சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத தனி வீட்டில் அந்த சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 12ம் தேதி இரவு 7:30 மணிக்கு பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரை பிடிக்க சென்றனர். அப்போது குற்றவாளிகளில் ஒருவரான தவசி தன்னிடம் இருந்த அரிவாளால் மகளிர் இன்ஸ்பெக்டர் சொன்ன சுவர்ணவள்ளி என்பவரை தோள்பட்டையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார்.

அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தன்னிடம் இருந்து துப்பாக்கியால் தவசியின் இடது காலில் சுட்டார். இதில் குண்டு காயம் ஏற்பட்ட தவசி கீழே விழுந்தார். போலீசார் தவசி மற்றும் தப்பி ஓட முயன்ற சந்தோஷ் ஆகியோரை மடக்கி பிடித்தனர். இருவர் மீதும் போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

கோவையில் சூலூர் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது கோவை மக்களை மேலும் அதிர வைத்துள்ளது. போலீசார் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் தொடர்பான விவரங்களையும் போட்டோ பதிவுகளையும் வெளியிட மறுத்து விட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

2 thoughts on “கோவையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது துப்பாக்கி சூடு… இரண்டு பேர் கைது!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *