கேஸ் சிலிண்டர் வரலைங்க…உதவி கேட்டு கோவை இட்லி பாட்டி மனு…
கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள் (90).
இவர் அதே பகுதியில் 1 ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்து வருகிறார். சட்னி, சாம்பாருடன் இவர் தரும் 1 ரூபாய் இட்லிக்கு ஏக மவுசு இருக்கிறது. லாப நோக்கமின்றி மக்களுக்கு பசியாற உணவு தரும் நோக்கத்தில் இவர் கடை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. 30 ஆண்டிற்கு மேலாக இவர் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
ஆரம்ப காலத்தில் விறகு அடுப்பில் இவர் இட்லி சுட்ட விற்பனை செய்து வந்தார். அன்றைய காலத்தில் இவர் 25 பைசாவிற்கு இட்லி விற்க ஆரம்பித்தார். பல ஆண்டுகளாகியும் இவர் 1 ரூபாய்க்கு மட்டுமே இட்லி தருகிறார். சாதாரண சின்ன கடைகளில் கூட இட்லி 10 |ரூபாய், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் கமலாத்தாள் பாட்டியின் சேவை பலரையும் கவர்ந்தது.
பல்வேறு தரப்பினர் அவர் கடை நடத்தி, வசிப்பதற்கு உதவி செய்து வந்தனர். விறகு அடுப்பில் இருந்து கேஸ் சிலிண்டர் மூலமாக கடந்த 10 ஆண்டாக இவர் இட்லி சமைத்து விற்பனை செய்தார். இதற்கு கேஸ் நிறுவனத்தினர் இலவசமாக கேஸ் வழங்கி வந்தனர். இந்த இலவச கேஸ் கடந்த 2 மாதமாக நிறுத்தப்பட்டது. இதனால், 1 ரூபாய்க்கு இட்லி செய்து தர முடியாமல் கமலாத்தாள் பாட்டி கஷ்டப்பட்டார்.
இது தொடர்பாக இன்று அவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது அவர் “கேஸ் சிலிண்டர் இலவசமாக தந்தார்கள், ஏன் நிறுத்தி விட்டார்கள் என தெரியவில்லை, எனக்கு மீண்டும் வழக்கம் போல் சிலிண்டர் தர சொல்லி மனு கொடுக்க வந்தேன், என்றார். இட்லி பாட்டி உதவி கேட்டு வந்த வீடியோ பதிவு வைரலாக பரவியது ஊருக்கே மலிவு விலையில் இட்லி தந்த பாட்டியை இப்படி பாடாக படுத்தறாங்க, இனி யாரு மக்களுக்கு சேவை செய்ய வருவாங்க, இந்த அரசாங்கம் ஏன் இப்படி இருக்கு என பல்வேறு தரப்பினர் சோசியல் மீடியாக்களில் ஏக வசனத்தில் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Straightforward and honest platform. No hidden fees or complicated rules. Just a great place to enjoy some games ole99link
Really impressed with the variety of games available here. There is always something new to explore. See you all at bdbjbaji777