நெஞ்சில் ஒரே குத்து.. உயிரிழந்த தொழிலாளி..

கோவை உக்கடம் பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருபவர் பாசித் (36). இவர் தனது நண்பர் பிரகாஷ் (38) என்பவருடன் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த உக்கடம் பகுதியில் உள்ள ஓட்டலில் கூலி வேலை செய்து வரும் சிராஜ் (22) நின்று கொண்டிருந்தார். ‌ இந்த நிலையில் பாசித் பின்னால் நின்ற சிராஜை கவனிக்காமல் ஆட்டோவை ரிவேர்ஸ் எடுத்துள்ளார். ஆட்டோ சிராஜ் மீது மோதியது….

Read More

ஜாலியா , ஜாக்கிரதையா இருங்க.. நியூ இயருக்கு போலீஸ் அலார்ட்..

கோவை நகரில் புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். குறிப்பாக ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் போலீசார். அதிகளவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். ஜிடி நாயுடு பாலம், உக்கடம் மேம்பாலம் போன்றவற்றில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நகரில் பல்வேறு இடங்களில் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்பவர்களை தடுக்க, மது போதையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்பவர்களை மடக்கி பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் செக்போஸ்ட்…

Read More

அமெரிக்க மாணவியை மனைவியாக்கிய கோவை வாலிபர்…

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ராமன் நம்பீசன், உமா ஆகியோர் கோவை குனியமுத்தூரில் வசிக்கின்றனர். இவர்கள் மகன் வாசு தேவன் (30). இவர் அமெரிக்காவில் விண்வெளி மையத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார் இவருக்கும் அமெரிக்காவின் பிலடெல்பியாவை சேர்ந்த சைமன் கசாஸ், கிறிஸ்டின் கசாஸ் ஆகியோரின் மகளான கட்டட கலை படித்து வரும் மாணவியான கரோலின் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலானது. இரு தரப்பினரும் தங்களது காதல் விசயத்தை பெற்றோரிடம் கூறினர். இரு தரப்பு…

Read More

காந்திபுரம் பெரியார் சிலை இடமாற்றம்

கோவை காந்திபுரம் விரைவு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தந்தை பெரியார் சிலை வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு காந்திபுரம் மேம்பாலம் கட்டும் பணிக்காக சிலை இடையூறாக இருப்பதாக கருதி சிறிது தூரம் இடமாற்றி அமைக்கப்பட்டது. மேம்பாலம் பணி முடிந்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட நிலையில் சிலை மீண்டும் பழைய இடத்தில் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் சிலையை மீண்டும் பழைய இடத்திற்கு வைக்க அனுமதி வழங்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்….

Read More

10,626 பேருக்கு நலத்திட்ட உதவி

கோவை ஆர்எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (30ம் தேதி) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா முடிந்த பணிகள் திறப்பு விழா நடக்கவுள்ளது. காலை 10 மணிக்கு நடக்கும் இந்த விழாவில், 12 புதிய பணிகளுக்கு 31 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டப்படும். பள்ளி மைதானத்தில் 6500 சதுர மீட்டர் பரப்பில் 9.67 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரக்கிலான ஹாக்கி மைதானம் என 162.52…

Read More

2 நாள் வாக்காளர் முகாமில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள்..

கோவை மாவட்டத்தில் 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் எஸ் ஐ ஆர் என்ற சுருக்கத் திருத்தப் பணிகள் முடிவு பெற்றது இந்த நிலையில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க நேற்றும் இன்றும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் வாக்காளர்களாக பெயர் சேர்க்க 35,065 பேர் விண்ணப்பம் அளித்தனர். திருத்தம் செய்ய 14935 வாக்காளர்கள் விண்ணப்பம் வழங்கினர். பெயர் நீக்கம் செய்ய 813 பேர் விண்ணப்பித்தனர். மொத்தமாக இரண்டு நாள் முகாமில் 50813 விண்ணப்பங்கள் பெறப்பட்டது….

Read More

மெஷினில் தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக இருந்த பெண்..!

கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் மனைவி ஆனந்த ஜோதி (50). இவர் பீளமேடு பகுதியில் உள்ள மர அறுப்பு மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று வேலை செய்த போது இவரது தலை முடி மெஷினில் மாட்டியது. இழுக்க முடிகின்ற போது வெளியே வரவில்லை. தலைமுடியுடன் தலை உள்ளே சிக்கியதால் பலத்த ரத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை வழங்கியும் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம்…

Read More

உக்கடம் மேம்பாலத்திற்கு இனி சி.சுப்பிரமணியம் மேம்பாலம்..

கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்திற்கு ஜி டி நாயுடு மேம்பாலம் என பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயர் பல்வேறு சர்ச்சை மற்றும் வரவேற்பை பெற்றது. இது ட்ரெண்டிங் ஆன நிலையில் கடந்தாண்டு கோவை உக்கடம் முதல் ஆத்து பாலம் வரை அமைக்கப்பட்ட 1.9 கிலோமீட்டர் தூர மேம்பாலத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி சுப்பிரமணியம் பெயர் இன்று வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சி சுப்பிரமணியம் மேம்பாலம் என பெயர்…

Read More

கோவையில் 174 ஓட்டு மெஷின் மக்கர்..

கோவை மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடி மையங்கள் உள்ளது. வரும் தேர்தலுக்காக கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஒட்டு சாவடிகளின் எண்ணிக்கை 3563 ஆக அதிகரிக்கவுள்ளது. மாவட்டத்திற்காக 8391 ஓட்டு பதிவு மெசின்கள், 5245 கட்டுப்பாட்டு மெசின்கள், 5885 ஒட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் என 19,521 மெசின்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசின்களில் கடந்த…

Read More

லங்கா கார்னரில் குழி தோண்டியாச்சு..

கோவை அரசு மருத்துவமனை ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் பாலம் பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணி குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணி நடக்கிறது. ரோட்ட தோண்டி போட்டு இருக்காங்க இந்த வழியா போய் வருவது சிரமம். எனவே மாற்று வழி பாதையை தயவு செஞ்சு போங்க. சுங்கம் ரவுண்டானா பகுதியிலும் வேலை நடக்கிறது. ரோட்டில் குழி தோண்டி போட்டிருக்காங்க. பாத்து போங்க மக்களே..

Read More