கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு…

தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்து 500மீட்டர் வரையுள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கோவை மண்டலத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 851 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகள் அதிகளவில் மூடப்பட இருக்கிறது. காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள…

Read More

கோவையில் 4513 டன் உரம் இருப்பு…

இது குறித்து கோவை வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கோடை பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா உர வகை 3,176 மெட்ரிக் டன், டிஎபி உர வகை 1,458 மெட்ரிக் டன், பொட்டாஷ் உர வகை 2,933 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் உர வகை 1,342 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உர வகை 4,513 மெட்ரிக் டன், தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது….

Read More

கோவையில் தென்மேற்கு பருவமழை பாதிப்பை தடுக்க ஆலோசனை…

கோவை கலெக்டர் பவன்குமார் தலைமையில் தென்மேற்கு பருவமழை குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இதில், தென்மேற்கு பருவமழை காலத்தினை முன்னிட்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முழு தயார் நிலையில் இருக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் தாலூகா அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். பேரிடர் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து 1077 என்ற கட்டணமில்லா…

Read More

கோவை ரயிலை கவிழ்க்க முயற்சி… ஏணி திருடர்கள் 2 பேர் கைது

திருவனந்தபுரத்தில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு செல்லும் அஹில்யா நகரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 10ம் தேதி கோவையை கடந்து சென்று கொண்டு இருந்தது. இந்த ரயில் ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சென்றபோது அங்கு தண்டவாளத்தின் குறுக்கே அலுமினியத்தினால் ஆன ஏணி வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், அதற்குள் அந்த ரயில் ஏணி மீது ஏறியது. இதில், அந்த ஏணி துண்டு…

Read More

பனிப்புயலால் கோவை வெள்ளிங்கிரி மலை ஏற தடை…!

கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையில் கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேல் வெள்ளிங்கிரி மலை அமைந்துள்ளது. 7 மலை ஏறி கிரி மலை தரிசனம் செய்து வருகிறார்கள். சமீபத்தில் கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. வெள்ளிங்கிரி மலை மற்றும்…

Read More

கோவை மாவட்டத்தில் டீன் ஏஜ் கர்ப்பம் அதிகரிப்பு குறித்து விசாரணை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப வன்முறை, குழந்தை திருமணம், சிறார் கர்ப்பம் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மகளிர் போலீசார், சைல்ட் லைன் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்திதல் ஏப்ரல் மாத டீன் ஏஜ் சிறார் கர்ப்பம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மாவட்ட அளவில் ஒன்றியம் வாரியமாக சிறார்…

Read More

கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லாத (drop out ) 3349 மாணவர்கள் குறித்து விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி வராத மாணவ மாணவிகள் (School drop out) தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி கணக்கெடுப்பின் படி, மாவட்ட அளவில் 3349 மாணவ மாணவிகள் பள்ளிக்கு வராமல் நின்று விட்டதாக அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. அதுவும் அரசு மற்றும் அரசு சார்பு பள்ளிகளில் படித்த இந்த மாணவ மாணவிகள்…

Read More

கோவையில் நினைவுகளை சுமக்கும் மரங்கள்…!

கோவை நேரு ஸ்டேடியம் அருகே கோவை மாநகராட்சி மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா அமைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் இந்த பூங்கா முட்புதர் காடாக இருந்தது. அப்போது நேரு ஸ்டேடியம், வ.உ.சி பூங்கா, வ.உ.சி மைதானம், பஸ் ஸ்டாண்ட் கிடையாது. பனை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இந்த பகுதிக்கு அந்த காலத்தில் ‘பனங்காட்டுபுதூர்’ என்ற பெயர் இருந்தது. இந்த காட்டில் சில நிழல் தரும் மரங்கள் இருந்தன. வழி போக்கர் சிலர் இங்கே தங்கி ஒய்வெடுத்தார்கள்,…

Read More

கோவையில் கொட்டியது மழை கட்டானது மின்சாரம்…

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இன்று இரவு காற்றுடன் மழை பெய்தது. தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, ஆலாந்துறை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ள நீர் பாய்ந்து ஓடியது. வறட்சியால் தவித்து வந்த விவசாயிகள் மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை மலையை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சிறுவாணி அணை மற்றும்…

Read More

பாறை, பள்ளம்… ரூ.30 கோடி மைல்கல் மேம்பாலம் பணி தாமதம்…

கோவை மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் நடக்கிறது. 3 பேக்கேஜ்களாக பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ தூரத்திற்கு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 13 சிறுபாலங்களுடன் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது, பைபாஸ் ரோட்டின் துவக்கமான மைல்கல் சுகுணாபுரம் மஞ்சு பள்ள ஓடை மீது புதிதாக மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. சுமார்…

Read More