கோவையில் ஆன்லைன் டிரேடிங் என மூதாட்டியிடம் 1.66 கோடி ரூபாய் மோசடி…

கோவை வடவள்ளியில் 63 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, அதில் ஆன்லைன் டிரேடிங் குறித்து ரீல்ஸ் வந்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்பதற்காக அவர் ரீல்சின் கீழ் இருந்த லிங்கை தொட்டுள்ளார். உடனே அவரது ‘வாட்ஸ் அப்’ எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மர்ம நபர்களால் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த வாட்ஸ்…

Read More

சிறுவாணி அணையில் தூறல் மழை…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 49.53 அடி இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இன்னும் 3 மீட்டர் வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது அணை நீர் மட்டம் டெத் ஸ்டோரேஜ் என்ற இறுதி கட்ட இருப்பு அளவை எட்டி விட்டது. அணையில் இருந்து 4 கோடி லிட்டர் அளவிற்கும் குறைவாக தினமும் குடிநீர் பெறப்படுகிறது. தினமும்…

Read More

ரூ 6 கோடியில் கோவை மைல்கல் ‘சுரங்க பாலம்’ கட்டும் பணி விரைவில் துவக்கம்…

கோவை மதுக்கரை மைல் கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை 11.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த பைபாஸ் ரோடு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. மைல் கல் பகுதியில் 30 கோடி ரூபாய் செலவில் மஞ்சு பள்ள ஓடையின் மீது 30 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இந்த பணி முடிய மேலும் ஒரு ஆண்டு ஆகும் என…

Read More

கோவை காப்பகத்தில் மாணவர் மீது தாக்குதல்; கலெக்டரிடம் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுங்கம் பகுதியை சேர்ந்த காவியா என்பவர் இன்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் எனது மகன் ரித்திக்ராஜ் தங்கியிருந்து படித்து வந்தான். இந்த நிலையில் எனது மகனை கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது அவனது உடலில் காயங்கள் இருந்தது. இதுகுறித்து அவனிடம் விசாரித்த போது, காப்பகத்தில் இருந்த 2 மாணவர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்தான். இதனால்…

Read More

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி வேன் டிரைவர் கைது…!

கோவையை சேர்ந்த 6 வயதான சிறுமி, தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததால், தாயார் சிறுமியை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அந்த சிறுமியின் தாயார் கோவை வந்தார். பின்னர் அவர் தனது மகளை தன்னுடன் பெங்களூருவுக்கு அழைத்துச்சென்றார். அவர் தனது மகளை கவனித்தபோது அவர் மிகவும் சோர்வுடன் இருந்தார். உடனே அவர் தனது மகளிடம்…

Read More

கோவையில் தேர்தல் காலத்தில் 834 புகார் மனுக்கள் குவிப்பு

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மாவட்ட அளவில் குறை தீர்ப்பு முகாம்கள் மூலமாக 17,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் மார்ச், ஏப்ரல் மாதங்களில் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெறுவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. இந்த…

Read More

கனமழையால் கோவை ஏர்போர்ட் காம்பவுண்ட் இடிந்தது: விமான சேவை ரத்து

கோவை விமான நிலையம் பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளாகம் 16,400 சதுர மீட்டர் பரப்பில் இருக்கிறது, 24 செக் இன் கவுண்டர்கள், 12 குடிவரவு கவுண்டர்கள், 6 செக்யூரிட்டி பகுதி வழியாக சோதனை நடக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் இங்கேயிருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலைய வளாகம் முழுவதும் 12 அடி உயரத்திற்கு மேல் காம்பவுண்ட் சுவர் அமைத்து பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று…

Read More

கோவை மாவட்டத்தில் 4.76 லட்சம் மகளிர் உரிமைத்தொகைக்காக காத்திருப்பு…

கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. கடந்த 2023ம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 4,25,705 பயனாளிகளுக்கு ரூ.1000 வீதம் ஒரு வருடத்திற்கு 510 கோடியே 84 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மகளிருக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம்பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை கோரிய…

Read More

கோவையில் மூடிய டாஸ்மாக் பாரில் சரக்கு: குடி பிரியர்களை விரட்டிய போலீசார்…!

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் கடைகள் இருந்தது . இதில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில அளவில் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கியது. கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி டாஸ்மாக் மதுபான கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை பத்துக்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. டாஸ்மாக் மதுபான கடைகளை மூட 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இந்த…

Read More

கோவையில் இளம்பெண்ணுடன் பழகிய வாலிபரை கடத்தி தாக்குதல்

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எல்.ஜி.பி நகர் புதூர் வீதியை சேர்ந்தவர் ரித்தீஸ்வரன் (19). இவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே மாலில் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேலை செய்து வந்தார். அந்த இளம்பெண்ணுடன், ரித்தீஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரித்தீஸ்வரன் அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பெற்றதாக தெரிகிறது. அதை திருப்பிக் கொடுப்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த…

Read More