கோவையில் ஆன்லைன் டிரேடிங் ரூ.72 லட்சம் போச்சு…

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 50 வயது நபர் தனது தந்தையின் நிறுவனத்தில் மேலாளராக இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாட்ஸ் அப் எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மர்ம நபர்களால் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த வாட்ஸ் அப் குழுவில் முன்னணி நிறுவனங்களில் பங்குகளை வாங்குவது, விற்பது குறித்து பகிர்ந்து வந்துள்ளனர். அதன்பின் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், அவரிடம் முதலீடு செய்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தால் அதிக லாபம்…

Read More

கவுண்டம்பாளையம், குனியமுத்தூர் பகுதியில் நாளை மின்தடை…

கோவை மின் பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லாம்பாளையம் ஹவுசிங் யூனிட், ஏஆர் நகர்,தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்,தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம்…

Read More

690 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் தெலுங்கு வீதியில் இன்று வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்….

Read More

கோவை போலீசில் வாக்கி டாக்கி மக்கர்…!

கோவையில் மாநகரில் போலீஸ் கமிஷனர் தலைமையில் வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்கள், போக்குவரத்து துணை கமிஷனர், ஆயுதப்படை துணை கமிஷனர், தலைமையிடத்து துணை கமிஷனர், 18 உதவி கமிஷனர்கள் மற்றும் 54 இன்ஸ்பெக்டர்கள், 115 எஸ்ஐ.,க்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சைபர் கிரைம், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்பு துறை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போன்ற பல்வேறு தனிப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களை தவிர 20 சட்டம் ஒழுங்கு போலீஸ்…

Read More

கோவை சிறையில் கைதி தற்கொலை முயற்சி…

கோவை சூலூர் சின்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (25). இவர், கடந்த 2025ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் 22-வது பிளாக்கில், 10-வது அறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில், ஜீவானந்தம் கழிவறையின் பின்புறம் உள்ள இரும்பு கம்பியில் தனது லுங்கியைப் பயன்படுத்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் சத்தம்போட்டு போலீசாரை அழைத்தனர்….

Read More

தவெக ஆட்சி கவிழுமா. .. செந்தில் பாலாஜி பேட்டி…!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோட்டை மேடு பகுதியில் வாக்காளர்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேட்டியின்போது செந்தில்பாலாஜி கூறுகையில் கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டத்தில், மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றோம். வரும் காலத்தில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கோவையில் உள்ள 10…

Read More

எஸ்பி வேலுமணி கோஷ்டி ‘ காலி’ செ. ம வேலுசாமி குரூப் லிஸ்ட் ரெடி…!

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தலைமைக் கழகத்தின் எதிர்ப்பை மீறி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இந்த நிலையில் அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி உள்கட்டமைப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செ.ம வேலுசாமி நியமனம் செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள்…

Read More

கோவை குள வாய்க்கால் சீரமைப்பு பணிகள்… ஆய்வு செய்த கலெக்டர்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் மழைக் காலங்களில் நீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி சாலை நெசவாளர் காலனி பட்டணம் இட்டேரி பகுதியில் அமைந்துள்ள நீர் வரத்து கால்வாயில், மழைக்காலங்களில் தங்கு தடையின்றி நீர் செல்லும் வகையில் சுமார் 2.3 கி.மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு…

Read More

கோவையில் ரயில் பாதையில் விளையாடிய சிறுவன் உயிர் பறிபோனது…

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி ஜெயபிரியா. இவர்களது மகன் பிரகதீஷ் (8), அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் இன்று மதியம் பிரகதீஷ் வீட்டில் விளையாட செல்வதாக கூறி தனது சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்றார். பின்னர், ஒண்டிப்புதூர் சவுடேஸ்வரி நகரில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். அங்கு ரயில் வருகிறதா? என தண்டவாளம் அருகே நின்று வேடிக்கை பார்த்தார்….

Read More

கோவையில் கூலி தொழிலாளி அடித்து கொலை…? 2 பேரிடம் விசாரணை

கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). கூலி தொழிலாளி. இவர் மனைவி பாரதி கண்ணம்மா (33). சுரேஷிற்கு நீண்ட நாட்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 12ம் தேதி பாரதி கண்ணம்மா உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக கேரளா சென்றார். மறுநாள் மாலை சுரேஷின் நண்பர் ராஜேஷ் என்பவர் சுரேஷை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது,…

Read More