கோவையில் நின்ற லாரியில் ஆண் சடலம்

கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஒரு லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியது . இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த டிரைவர்கள் லாரி மீது ஏறி பார்த்தனர் . அப்போது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது தொடர்பாக உக்கடம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபருக்கு சுமார்…

Read More

கோவையில் ‘எப் எல் 2’ பார்கள் மூடலையே…கலெக்டரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் புகார்…

கோவை மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று போராட்டம் நடத்தி புகார் மனு அளித்தனர். அதில் கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் அருகே சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு செயல்படும் மதுபான கடைகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது .இதன்படி கோவை மாவட்டத்தில் 69 மதுபான கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதே 500 மீட்டர் தூர எல்லைக்குள் எஃப் எல் 2 என்ற தனியார் மதுபான…

Read More

கோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது… 200 ரூபாய் அச்சடித்தது எப்படி…

கோவை மாநகரப் போலீசார் போதைப்பாக்கு மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று சுகுணாபுரம் பகுதியில் கரும்புக்கடை போலீசார் சோதனை செய்தபோது கரும்பு கடை பகுதியை சேர்ந்த பைசல் (37) சதாம் உசேன் (28) மற்றும் போத்தனூர் சேர்ந்து ஹக்கீம் (51) ஆகியோர் இரண்டு கிராம் மெத்தபட்டமின் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிரமாக விசாரித்த போது இவர்கள் கள்ள ரூபாய் நோட்டு…

Read More

கோவையில் வீட்டு வேலைக்கு வருபவர்கள் குற்றவாளிகளா என கண்டறிய உத்தரவு…

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு டிரைவர் வீட்டு வேலை செய்யும் நபர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலை செய்யும் நபர்களை அனுப்பிவைக்கும் (Man Power Agency & Security) நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் அரசின் விதிமுறைகளின்படி முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்குரிய…

Read More

கோவையில் தேர்தல் செலவு ரூ.30 கோடி…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் பேப்பர்கள் பெறப்பட்டது. இது தவிர பல்வேறு பொருட்கள், விழிப்புணர்வுக்கான பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 3540 ஓட்டு சாவடிகள் தயார் செய்யப்பட்டது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது. அங்கே 300 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள், கவுண்டிங் சென்டர் வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்ட்ராங்…

Read More

எஸ்.பி வேலுமணிக்கு இறங்கு முகம்… செ. ம வேலுசாமி குரூப் வசம் அதிமுக…

கோவை மாவட்ட அதிமுகவில் கடந்த 15 ஆண்டாக எஸ்.பி வேலுமணியின் ஆதிக்கம் தான் இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து அப்போது கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த செ.ம வேலுச்சாமியின் பதவி பறிக்கப்பட்டது. சீனியரான செ.ம வேலுச்சாமி இரு முறை அமைச்சராக இருந்தவர். தனக்கு பதவி பறிபோன பின்னர் செ.ம வேலுச்சாமியின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. இவரின் ஜூனியராக இருந்த எஸ்.பி வேலுமணி கட்சியை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தார். கட்சி விசுவாசத்தில் தீவிரமாக…

Read More

கோவையில் நடைபாதை வியாபாரிகள் மடியேந்தி போராட்டம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட சாலையோர வியாபார கடை வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கடந்த சில ஆண்டாக சாலையோர வியாபாரிகளுக்கான நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு வழங்கியுள்ள நிதி எதுவும் சாலையோர வியாபாரிகளுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். 50க்கும்…

Read More

கோவையில் சிறுவனை அடித்து கொலை செய்து புதைத்த கொடூரம்…

கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா . கூலி தொழிலாளி. இவரது மகன் தவிஸ் (13 ). இவர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த வந்தார் . கடந்த 15ம் தேதி இவர் மீன்பிடிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றார் .திரும்ப அவர் வீட்டுக்கு வரவில்லை. இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுவன் தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்தது. சிறுவன் அதே…

Read More

டாஸ்மாக் கடையை மூட சொல்லுங்க… கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர் அதில் தடாகம் ரோடு கோவில் மேடு பஸ் ஸ்டாப் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது இதற்கு அருகே 3 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு பள்ளி வழிபாட்டுத்தலங்கள்…

Read More

கோவை குளக்கரையில் நிர்வாண நிலையில் ஆண் கொலை…!

கோவை சூலூர் ஆச்சான் குளம் கரை பகுதியில் இன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது . நிர்வாண நிலையில் இந்த சடலம் குளக்கரையில் தூக்கி வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக நீலாம்பூர் போலீசில் புகார் தரப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. அடிதடி மோதல் ஏற்பட்டதில் அந்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். கொலை…

Read More