கோவை கலெக்டர் அலுவலகத்தில் குட்டி மயிலை கடித்து கொன்ற நாய்கள்…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில அளவைத் துறை பயிற்சி வளாக கட்டடம் பின்புறம் புதர்கள் மண்டி கிடைக்கிறது. இன்று காலை மயில் ஒன்று தனது குட்டி மயிலுடன் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த நாய்கள் கூட்டமாக மயில் மற்றும் குஞ்சு மயிலை படிப்பதற்காக விரட்டின. இதைப் பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாய்களை விரட்டி விட்டனர் . மேலும் குட்டி மயிலை பிடித்து
பாதுகாக்க முயன்றனர் . ஆனால் அதற்குள் நாய்கள் கடித்ததில் குட்டி மயில் பரிதாபமாக உயிரிழந்தது . குட்டி மயிலே காப்பதற்காக ஊழியர்கள் தண்ணீர் கொடுத்து உதவி செய்தும் அது உயிர் பிழைக்கவில்லை .
தெரு நாய்கள் கூட்டமாக கலெக்டர் அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நாய் விலை பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும் என பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .தேசிய பறவையான மயில் நாய்கள் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பது கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இனியாவது மயில்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என வன உயிரின ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
