1.58 லட்சம் மின் கம்பங்கள் வாங்க டெண்டர்…

தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மின் மண்டலங்களில் 1.58 லட்சம் மின் கம்பங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பழுதடைந்த மின் கம்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் போதும் மின் கம்பம் இல்லாததால் மின் வினியோகம் செய்யப்படாமல் இருக்கிறது. மின் கம்பங்கள் பழுதினால் இடங்களில் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்ந்து இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், விவசாயிகள், வணிக வர்த்தக தொழில் நிறுவனத்தினர் மின்தடை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின் பராமரிப்பு பணிகளை செய்வதற்கும் போதுமான லைன்மேன்கள் பற்றாக்குறை மாநில அளவில் இருக்கிறது. கடந்த பல மாதங்களாக பழுதடைந்த மின்கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின் கம்பங்கள் கொள்முதல் செய்து தரப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக மின்வாரி புதிதாக பிஎஸ்சி மின்கம்பங்களை கொள்முதல் செய்து பெறுவதற்கான ஒப்பந்தத்தை வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே வெளியான டெண்டர் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டர் வெளியாகி இருக்கிறது இதில் மாநில அளவில் 300 கிலோ எடையிலான 9 மீட்டர் உயரமுள்ள மின் கம்பங்களை கொள்முதல் செய் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு மின் வாரிய எல்லையில் 3100 மின் கம்பங்கள், கோவை தெற்கில் 1600 மின் கம்பங்கள், கோவை மெட்ரோ பகுதியில் 1000, திருப்பூர் பகுதியில் 3300, பல்லடம் பகுதியில் 800, உடுமலைப்பேட்டையில் 1200, நீலகிரி மாவட்டத்தில் 800 என மண்டல அளவில் 11,800 மின்கம்பங்கள் கொள்முதல் செய்து பெறப்படும்.

ஈரோடு மண்டலத்தில் 13000, வேலூர் மண்டலத்தில் 17,900 காஞ்சிபுரம் மண்டலத்தில் 8100, சென்னை வடக்கில் 3500, வேலூர் மண்டலத்தில் 17900, திருவண்ணாமலை மண்டலத்தில் 17600 என

மாநில அளவில் 71900 மின்கம்பங்கள் பெறப்படும். இது மட்டுமின்றி 8 மீட்டர் உயரத்தில் 200 கிலோ எடையில் 86,400 எண்ணிக்கையில் மின்கம்பங்கள் கொள்முதல் செய்து பெறவும் டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம், சென்னை வடக்கு, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை மற்றும் கோவை மண்டலத்தில் இந்த மின்கம்பங்கள் பெறப்படும்.

இதில் கோவை மண்டலத்தில் கோவை வடக்கில் 4500, கோவை தெற்கு 2500, வை மெட்ரோ பகுதியில் 1300, திருப்பூர் மாவட்டத்தில் 3800, பல்லடத்தில் 3600, உடுமலைப்பேட்டையில் 2600 நீலகிரி மாவட்டத்தில் 2200 என 20400 மின் கம்பங்கள் கொள்முதல் செய்து பெறப்படும். ஈரோடு மண்டலத்தில் 12,000 திருவண்ணாமலை மண்டலத்தில் 22,000 வேலூர் மண்டலத்தில் 12,000 காஞ்சிபுரம் மண்டலத்தில் 14,000

சென்னை வடக்கில் 6000 மின் கம்பங்கள் கொள்முதல் செய்யப்படும். மாநில அளவில் 1,58,300 மின் கம்பங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் இந்த மின் கம்பங்கள் வாங்கப்படவுள்ளது. டெண்டரில் விலை விவரங்கள் இறுதி செய்யப்படும். மின் கம்பங்கள் கொள்முதல்

நிறுவனங்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரியத்தனர் கூறுகையில், “வரும்29ம் தேதி வரை டென்டரில் ஒப்பந்தங்களை

சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக ஒப்பந்த புள்ளிகள் பெறப்படும். டெண்டர் தொடர்பான பல்வேறு விதிமுறைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருக்கிறது. 9 மீட்டர் கம்பங்கள் டெண்டர் எடுக்கும் நிறுவனத்தினர் கடந்த காலங்களில் ஒரு ஆண்டில் 718 லட்சம் ரூபாய்க்கு டர்ன் ஓவர் செய்திருக்க வேண்டும்.

8 மீட்டர் உயர மின் கம்பங்கள் எடுக்கும் நிறுவனத்தினரின் ஆண்டு டர்ன் ஓவர் 579 லட்ச ரூபாய் அளவில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது. விதிமுறைக்கு ஒத்து வராத நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் நிராகரிக்கப்படும். “ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *