பிரிட்டிஷார் கொண்டாடிய வெரைட்டி ஹால் ரோடு…
கோவை போத்தனூரில் ஆங்கிலேயர் காலனி இருந்தது. அங்கே 400க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தினமும் இரவில் ஆங்கிலேயர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஜாலியாக பொழுது போக்குவார்கள். அவர்களின் இரவு ஆட்டத்திற்கு கோவையில் எங்கேயும் கேளிக்கை விடுதி கிடையாது. அப்போது கோவையில் பிரபலமாக இருந்த வின்சென்ட் சாமிக்கண்ணு (இவர் பெயரில் உக்கடத்தில் ரோடு உள்ளது) ஒரு கேளிக்கை விடுதி கட்டினார். அந்த விடுதியில் நடனம், நாட்டியம், நாடகம் நடக்கும். சினிமா பார்க்க ஆங்கிலேயர்கள் விரும்பினால் பெரிய திரை…
