கோர்ட்டுக்கு சென்று வந்த கைதியிடம் கஞ்சா…!
நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டுத் திரும்பிய விசாரணை கைதி சிறை வாயிலில் கஞ்சா பொட்டலத்தை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதியான செந்தில்நாதன் (38) என்பவர் நீதிமன்ற விசாரணைக்காக நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்க வேனில் கொண்டு வரப்பட்டார். அப்போது சிறையின் பிரதான நுழைவு வாயில் அருகே வந்த போது அவர் தான் மறைத்து வைத்திருந்த ஒரு பொட்டலத்தை கீழே வீசியுள்ளார். இதனை சிறை போலீசார்…
