கோர்ட்டுக்கு சென்று வந்த கைதியிடம் கஞ்சா…!

நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டுத் திரும்பிய விசாரணை கைதி சிறை வாயிலில் கஞ்சா பொட்டலத்தை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதியான செந்தில்நாதன் (38) என்பவர் நீதிமன்ற விசாரணைக்காக நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்க வேனில் கொண்டு வரப்பட்டார். அப்போது சிறையின் பிரதான நுழைவு வாயில் அருகே வந்த போது அவர் தான் மறைத்து வைத்திருந்த ஒரு பொட்டலத்தை கீழே வீசியுள்ளார். இதனை சிறை போலீசார் சிசிடிவி கேமராவில் பார்த்தனர். உடனே போலீசார் அந்த பொட்டலத்தை எடுத்து பார்த்தனர். அப்போது அதில் 3 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெயிலர் திருமலை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை கைதி செந்தில்நாதன் மீது வழக்கு பதிவு செய்து, கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் கஞ்சா கொடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *