கோவையில் பில்லூர் 4வது திட்டத்திற்கு எதிர் பார்ப்பு
கோவை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையால் பில்லூர் 4வது குடிநீர் திட்டம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் குடிநீர் விரிவாக்க திட்டத்தில் 40 வட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். கூட்டு குடிநீர் திட்டத்தில் கோவை முதன்மை இடத்தை எட்டி வருகிறது. கோவை மாவட்டத்தில் பில்லூர் 1, 3 திட்டம், சிறுவாணி, ஆழியாறு, அமராவதி, பவானி, பேரூர் கூட்டு குடிநீர், வடவள்ளி வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குனியமுத்தூர் கிணத்துக்கடவு குடிநீர் திட்டம் என 13 குடி நீர் திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது.
கடந்த 10 ஆண்டிற்கு முன் ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக 20 லட்சம் பேர் பயன்பெற்றனர். தற்போது பயனாளிகள் எண்ணிக்கை 30 லட்சமாக உயர்ந்து விட்டது. குறிப்பாக பில்லூர் திட்டம் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் கட்டன் மலையை குடைந்து குகை பாதை அமைத்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. காளப்பட்டி, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, கோவில்பாளையம்
, அன்னூர் வட்டாரங்களில் கூடுதல் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பில்லூர் திட்டம் 1.2.3 என விரிவாக்கப்பட்டது. இந்த திட்டங்களில் 2.60 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கோவை மட்டுமின்றி திருப்பூர் மாவட்ட மக்களும் பயன் பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தை மேலும் பல கிராம பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் பெரும்பாலான பகுதியை பில்லூர் திட்டத்தில் இணைத்து இதை பெரிய நெட்வொர்க் திட்டமாக மாற்ற ஏற்பாடு நடக்கிறது.
பில்லூர் 4வது திட்டத்தை நிறைவேற்ற சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கு உயர் அதிகாரிகள் குடிநீர் எங்கே எப்படி பெறலாம் என ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளனர். கோவையில் இந்த திட்டத்திற்கு நேரடியாக அணையில் குடிநீர் பெறலாம் பவானி சாகர் அணையில் இருந்து குடிநீர் பெற வழிவகை இருக்கிறதா என ஆய்வு நடத்தவும் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
கோவை குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் கூறுகையில், ” மாவட்ட அளவில், அன்னூர் வட்டாரத்தில் மட்டுமே சற்று குடிநீர் சப்ளை குறைவாக இருக்கிறது. மாநகரில் தனி நபர் குடிநீர் 130 லிட்டர் எனவும், நகராட்சியில் 100 லிட்டர் எனவும், பேரூராட்சி, ஊராட்சிகளில் 70 முதல் 50 லிட்டர் எனவும் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது.
சராசரியாக 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளையாகிறது. மாவட்ட அளவில் 2238 குக்கிராம குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் தரக்குறைபாடு தொடர்பாக இதுவரை புகார் வரவில்லை. குடிநீரில் தேவையான அளவு ஆலம், குளோரின் கலக்கப்படுகிறது. மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணி நடக்கிறது. பில்லூர், சிறுவாணி, பவானி குடிநீர் அதிகளவு சப்ளையாகிறது. மாவட்டத்தில் பல இடங்களில் ஆறு, நீர் தேக்கங்கள் இருப்பதால் தேவைக்கு ஏற்ப புதிய திட்டங்கள் துவக்குவதில் சிரமம் இருக்காது.
பில்லூர் கூடுதல் குடிநீர் திட்டத்திற்கு அணையின் டணல் பாதையில் இருந்து குடிநீர் பெறாமல் பிற இடங்களில் குடிநீர் பெற சாத்திய கூறுகள் ஆய்வில் இருக்கிறது. நீர் எடுப்பது தொடர்பான ஆய்வு முடிந்த பின்னரே விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடியும். கோவை நகருக்கு குடிநீர் வழங்க இந்த கூடுதல் திட்டம் உதவியாக இருக்கும். ” என்றனர்.

I hit a decent jackpot here last week and the withdrawal was processed in no time. Very trustworthy site. Head over to pgwin233online
The game variety here is just insane. I spent hours playing different slots and the payouts are actually fair. jili11games is my new favorite spot.