கஞ்சா சாக்லேட்: 6 பேர் கைது
கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாஸ்திரி நகர் மயானம் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள், குனியமுத்தூர் இடையார்பாளையம் கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (25), பி.கே.புத்தூர் பாண்டி கோயில் வீதியைச் சேர்ந்த சர்புதீன் (22) மற்றும் வீரகேரளம் பொங்காலியூர் பால கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து 1.05 கிலோ கஞ்சா மற்றும் 880 கிராம் எடையுள்ள 148 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல, ராமநாதபுரம் போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த கவின் பாண்டி (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்க பயன்படுத்திய 10 ஜிப் லாக் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சரவணம்பட்டி போலீசார் விளாங்குறிச்சி சாலை பூந்தோட்டம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற தரும்புரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (23) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரையைச் சேர்ந்த சந்துரு (29) ஆகிய இருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 350 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களது கூட்டாளியான மஞ்சு என்ற மஞ்சுநாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The graphics and sounds make the whole experience so immersive. It feels like a real casino right in my room. Love richjili777!