கோவையில் இருந்து நேபாளம் சுற்றுலா சென்ற 8 மாயம்…

நேபாளத்திற்கு சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலாத்துறை ஏஜென்சி நிறுவனம் சார்பில் மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதில், கோவையை சேர்ந்தவர்கள் 8 பேர் சென்றுள்ளனர். கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு, கற்பகம் கார்டனை சேர்ந்த டாக்டரான சுரேஷ் வெங்கடாசலம் (65), அவரது மனைவி தங்கலட்சுமி (58), வெங்கிடாபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளியின் தாளாளர் காயத்ரி (45), அவரது மகன் சிவந்த் (25), உறவினர்கள் சாயிபாபா காலனி ராஜ்திருத் ராம்சந்த், சாருவதா, வடவள்ளியை சேர்ந்த புனிதா, அவருடைய கணவர் பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் சென்றிருப்பதாக தெரியவந்தது.

இவர்கள் சென்னையில் இருந்து கடந்த 14ம் தேதி நேபாளத்திற்கு சுற்றுலா சென்றனர். தற்போது நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக இவர்களது கதி என்ன என்று தெரியவில்லை. இவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர், உறவினர்கள் பதற்றத்தில் உள்ளனர். இவர்களது உறவினர்கள் சிலர் நேபாளம் புறப்பட்டு சென்றிருப்பதாக தெரிகிறது.

கோவை மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், “எங்களுக்கு இதுவரை எம்பசி தகவல் எதுவும் வரவில்லை. மாயமான 8 பேர் பெயர் விவரம் மட்டும் கிடைத்துள்ளது. அவர்களின் செல்போன் தொடர்பு விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை. தமிழக அரசு காணாமல் போன தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்து உதவிக்கான செயல்களை செய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா சென்று காணாமல் போன இவர்களின் தகவல்கள் பெற நாங்கள் காத்திருக்கிறோம்” என்றனர்.

One thought on “கோவையில் இருந்து நேபாளம் சுற்றுலா சென்ற 8 மாயம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *