கோவையில் நடுரோட்டில் நிறுத்தி பெண்களை இறக்கி விடும் டவுன் பஸ்கள்…
கோவை நகரில் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாகி விட்டது.
மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்றாலும் பஸ்கள் குறைவாக இயக்குவதாலும் குறிப்பிட்ட பல ரூட்களில் பஸ் இல்லாத நிலையில் தனியார் பஸ்களை நம்பி மகளிர் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. குறிப்பாக பிக் ஹவர் எனப்படும் அலுவலக வேலை நேரம் முடிந்து போக்குவரத்து அதிகமாக காணப்படும் சமயங்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நேரங்களில் பஸ் ஸ்டாப்புகளில் பஸ்கள் முறையாக நிறுத்தப்படுவதில்லை. குறிப்பாக டவுன்ஹால் பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்களை நிறுத்தாமல் எதிரே நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி விடுகிறார்கள். பெண்கள் குழந்தைகளுடன் உடைமையுடன் படிக்கட்டில் தொங்கியபடி ஏற வேண்டி இருக்கிறது. மேலும் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி இறக்கி விடுவதால் மக்கள் இறங்கி ரோட்டை கடக்க முடிவதில்லை. பயணிகளை நடு ரோட்டில்
ரோட்டை கடந்தால் விபத்துகளில் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. டவுன்ஹால் மட்டும் இன்றி கோவை அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப், ராமநாதபுரம், உக்கடம், கரும்பு கடை, ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலைமை தான் இருக்கிறது. உக்கடம் பஸ் ஸ்டாண்டிலும் பயணிகளை டிரைவர்கள் அலைய வைக்கும் வகையில் பஸ்களை இயக்குகிறார்கள்.
மேலும் படிக்கட்டில் தொங்க வைத்தும் பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். அரசு பஸ்களில் மட்டும் டோர் லாக் வசதி இருக்கிறது. தனியார் பஸ்களில் இந்த வசதி செய்யப்படவில்லை. தனியார் டவுன் பஸ்சில் கூட்டம் அதிகம் சேர்க்க தேவையின்றி அதிக நேரம் பஸ்களை நிறுத்தி வைப்பது நடக்கிறது. இது தொடர்பாக ஆர்டீஓ மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமுறை மீறும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
