கோவையில் 75 கி.மீ தோண்டி ரோடு போடாமல் விட்ட்டாச்சு…!
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பாக பழைய 72 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
1850 கி.மீ தூரத்திற்கு சூயஸ் நிறுவனம் மூலமாக பள்ளம் தோண்டி குழாய் திப்பு பணிகள் நடக்கிறது. இதுவரை 1810 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்கப்பட்டது. 40 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்க வேண்டியுள்ளது. நகரில் இன்டர் நெட் கேபிள் இதர ஓயர் சாக்கடை குழாய்கள், மின் கம்பிகள் உள்ள பகுதிகளில் சவாலாக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
நகரில் பெரிய கடைவீதி, ராஜவீதி, என்.எச் ரோடு, சாயபாபா காலனி, மில் ரோடு, காந்தி பார்க், தியாகி குமரன் வீதி, வைசியாள் வீதி என பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இங்கே குழாய்கள் மண் போட்டு மூடப்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் இன்னும் தார் ரோடு அமைக்கப்படவில்லை.
இந்த வழியாக வாகனங்கள் சென்று வரும்போது விபத்து ஏற்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சில வாகனங்கள் மண்ணில் சறுக்கி கீழே விழும் நிலைமை இருக்கிறது.
மண் குவியலாக கிடப்பதால் புழுதி பறக்கிறது குழி பதித்து மண் போட்டு மூடி ஒரு மாதம் கடந்த நிலையில் இன்னும் ரோடு பணி நடத்தப்படவில்லை. மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் மண் போட்டு மூடிய நிலையில் 45 கி.மீ தூர ரோடு ஒப்படைக்கப்பட்டது. இதற்கு சுமார் 12 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை மாநகராட்சி நிர்வாகம்,
நெடுஞ்சாலைத்துறைக்கு கொடுத்து விட்டது. இதேபோல் தேசிய நெடுஞ்சாலை எல்லைக்குள் 30 கி.மீ தூரம் தோண்டப்பட்டு மண் மூடி கிடக்கிறது. இங்கே தார் தளம் அமைக்க வேண்டியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த வேலை செய்ய தேவையான கட்டமைப்பு இல்லை என கைவரித்து விட்டதால் மாநகராட்சி நிர்வாகமே தேசிய நெடுஞ்சாலையில் பேராடு போட தயாராகி விட்டது.
இதுவரை 75 கி.மீ தூரத்திற்கு குடிநீர் குழாய் பதித்து மண் போட்டு மூடப்பட்டிருக்கிறது. இங்கே வாகனங்கள் சென்று வருகிறது. இங்கே தார் தளம் அமைக்காமல் நெடுஞ்சாலை, மாநகராட்சியினர் போட்டி போட்டு தாமதம் செய்து வருகிறார்கள். பல இடங்களில் குழி மேடுமாக இருக்கும் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகிறது.
மக்கள் இந்த அவல ரோட்டை வீடியோ பதிவு செய்து வெளியிட்டும், வாகனங்கள் மண்ணில் புதைந்த காட்சிகளை காட்டியுள் மெத்தனமான சூழல் இருக்கிறது. மண் இறுகி கெட்டியாகும் காலம் வரை காத்திருப்போம். இலகு மண்ணில் ரோடு போட மாட்டோம் என மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் தாமதம் செய்வதாக தெரிகிறது.
இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோவை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் பணிகள் முடித்து விட்டது. ஆனால் அந்த இடங்களில் உடனடியாக எங்களால் தார் தளம் அமைக்க முடியாது. மண் இலகுவாக இருக்கிறது. 30 நாட்கள் கடந்த பின்னர் ரோடு போட முடியும்.
மேலும் சிறிது தூரம் மட்டுமே ரோடு போட முடியாது அனைத்து பகுதிகளிலும் ரோடு போட வேண்டி இருக்கிறது. எனவே மொத்த பணிகள் முடிந்து எங்களிடம் ரோட்டை ஒப்படைக்க வேண்டும் என நாங்கள் கேட்டிருக்கிறோம், என்றனர்.
