கோவையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை சாவு…

கோவை கவுண்டம்பாளையம் பிரிக்கால் காலனி 2வது வீதியில் வசிப்பவர் மகேந்திரன் குழந்தை நவ யுகன் (2) .

இன்று காலை நவ யுகனும் அவருடைய 6 வயது அக்காவும் வீட்டில் விளையாட்டிக்கொண்டிருந்தனர். வீட்டின் 12 அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியின் மூடி சிறிதளவு திறந்திருந்த நிலையில் இருந்துள்ளது. அதில் நவயுகன் விளையாடிக் கொண்டிருந்த பந்தானது தொட்டியின் உள்ளே விழுந்துள்ளது. அதை எடுப்பதற்கு சென்ற நவயுகனும் தொட்டியில் உள்ளே விழுந்துள்ளார். இதை அறியாத அவரது அம்மாவான பிரியதர்ஷினி குழந்தையை காணவில்லை என்று காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு கவுண்டம்பாளையம் போலீசார் சென்று பார்த்துபார்த்தபோது, பந்து விழுந்து கிடந்த தொட்டியில் இறங்கி பார்த்தபோது நவயுகன் நீரில் மூழ்கிய நிலையில் இறந்தது தெரியவந்தது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் விரைந்துவந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தொட்டியில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்த நவயுகனை மீட்டு பிரேத பரிசோதனைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

2 thoughts on “கோவையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை சாவு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *