இந்த தடவை கோவை தொகுதிகள் மிஸ் ஆக கூடாது… உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!

கோவை முதலிபாளையம் பகுதியில கோவை, நீலகிரி திமுக நகர ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூடடம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது மேற்கு மண்டலத்தில் உள்ள 30 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

கோவையில் கடந்த ஒரு மாதம் முன்பு நடந்த இளைஞரணி கூட்டம் மாநாடு போல் நடந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் முக்கியமான நேரத்தில் சந்திக்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

இளைஞரணி நிகழ்ச்சிகளை குடும்ப நிகழ்ச்சி போல பங்கேற்ற அனுபவம் அளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் களத்தில் இளைஞரணி என பிரசாரம் செய்ததன் மூலம் நூறு சதவீதம் வெற்றி பெறறோம். மீண்டும் களத்தில் இளைஞரணி மூலம் நூறு சதவீதம் வெற்றியை பெற வேண்டும்.

சிலர் கோவை தங்களது கோட்டை என கூறுகின்றனர். இந்த மேற்கு மண்டலம் திராவிட மாடல் அரசின் கோட்டை என நிருபித்து காட்டவேண்டும். எனவே துணை அமைப்பாளர்கள், கிளை அமைப்பாளர்கள் வீடு வீடாகச சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும். சில கட்சிகள் பூத் கமிட்டி கூட போட திண்டாடி வருகிறது. நம்

இளைஞர்கள் படையை தேர்தல் என்ற ஜனநாயக போருக்கு தயார் படுத்த வேண்டும். இது ஒரு பயிற்சி களம், கடைசி நேரத்தில் இன்னும் கடுமையான உழைக்க வேண்டும். ஆங்கிலத்தில் பைனல் புஷ் என்பார்கள் அது போல கூடுதல் உழைப்பை இப்போது காட்ட வேண்டும். திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனையை மக்களிடம் சென்று கூற வேண்டும்.

விளையாட்டு துறையில் 3 சதவீத இடஒதுக்கீட்டில் 300 வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1.32 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது, ரூ 5 ஆயிரம கொடுத்து உள்ளோம். திராவிட மாடல் 2.0 வந்தால் மாதம் இரண்டாயிரம் என கூறி உள்ளோம்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் அரசு சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வாரம் ஒரு முறை சென்று கொண்டு இருக்கிறார்கள். முதலில்

திருட்டு தனமாக போனவர்கள் இப்போது வெளிப்படையாக சென்று வருகிறார்கள். தமிழ்நாடு உருவாக்கிய கட்சி திமுக, அதிமுக அமித்ஷாவின் அடிமை கட்சி.

கார் மாறுதல், கால் மாறுதல் அடிமை கூட்டத்திற்கு புதிது இல்லை. பத்து தோல்வி பழனிசாமி இந்த தேர்தலில் படுதோல்வி பழனிசாமி ஆக்குவது உறுதி.

எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் என அதிமுக கூட்டணி ஏற்கவில்லை. அப்படி இருக்க தமிழ்நாடு மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். ஒரிஜினல் பிரண்ட வந்தால் டுப்ளிகட் பிராண்ட் அதாவது சைனா மேக் வரும். அது கொஞ்ச நாளில் வீணாகிவிடும்.

அது போல தான் அதிமுக ஒரு டெல்லி மேக். கொஞ்சம் நாள் தான் இருக்கும். தேரதல் முடிந்தவுடன் காணமால் போய்விடும். அதிமுக டெல்லியில் இருந்து அசெம்பல் பண்ண பீசு. அப்படி தான் அதிமுக கூட்டணி உறுவாகி உள்ளது. ஏ டீம், பிம் சிடீம் என எத்தனை டீம் வந்தாலும் திமுக தான் சாம்பியன்.

கப் நமக்கு தான். திமுக அரசின் திட்டங்கள், தமிழ்நாடு வளர்ச்சி குறித்து ஆதாரத்துடன் எடுத்து சொல்லுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் திமுகவில் வாக்களிக்க வேண்டும், நண்பர்கள் இடமும் திமுக சாதனை எடுத்து சொல்லுங்க. கொளகை அற்ற கூட்டம் உருவாகி உள்ளது அதனால் திட்டங்களை ஆதாரத்துடன் எடுத்து சொல்லுங்க. அதிமுக ஆட்சியில் அவர்கள் செய்தது மற்றும் நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்ததை டேட்டாவுடன் எடுத்து சொல்லுங்க.

ஒவ்வொரு வாக்குகளையும் இரண்டு முறை பார்க்க வேண்டும். 35 வயது உள்ளவர்கள் வாக்குகள் நமக்கு வர வேண்டும். கோவையில் இருந்து ஒரு தொகுதியில் கூட வெற்றி மிஸ் ஆக கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *