கல்லூரிகளிடம் அடாவடி மாணவர்கள் விவரம் கேட்கும் போலீசார்…!

கோவை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கிறது.

இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டுமின்றி இதர மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகளிலும் அதிகளவு கல்வி கற்கின்றனர். கோவை மாநகரில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இங்கே படித்தால் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால் அதிக எதிர்பார்ப்புடன் பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க அனுப்புகின்றனர். வெளி மாவட்ட மாணவ மாணவிகள் பலர் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கும் விடுதி மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே உள்ள விடுகிகளில் தங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாகவும் அடிக்கடி தகராறு, வாக்குவாதம், மோதலில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் முறையாக கவனிப்பதில்லை. குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும். மாணவர்களை கண்காணிக்க வேண்டும். விடுதிகளை முறையாக நடத்த வேண்டும் என மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கல்லூரி நிர்வாகிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டது.

கல்லூரி நிர்வாக தரப்பினர் மாணவர்களை கல்லூரி வளாகத்திற்குள் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களை வெளியேற்றுவது கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது.

சிலர் வெளி மாவட்டங்களில் இருந்து தங்கி படிக்கிறார்கள். அவர்கள் தவறு செய்தால் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்தால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை வீணாகிவிடும் என்பதால் சிறு தவறுகளை மன்னித்து அவர்களை தொடர்ந்து கல்வி கற்க அனுமதிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் இது பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது.

கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அதை எங்களால் தடுக்க முடியாது. கண்காணிக்க முடியாது. அதிக அதிகாரம் கொண்ட போலீசார் அதிக எண்ணிக்கையில் இருந்தும் மாணவர்களை குறிப்பாக கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பல்வேறு பொது இடங்களை நாங்கள் கண்காணிக்க இயலாது.

போலீசார் தான் கண்காணிக்க வேண்டும் நாங்கள் கண்காணித்து மாணவர்கள் மீது புகார் சொன்னால் மாணவர்கள் எங்கள் மீது கோபத்தை காட்டுகிறார்கள்.

எங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இருக்கிறது என கல்லூரி பேராசிரியர்கள் சிலர் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். மாநகர போலீசார் கோவை நகரில் உள்ள தங்கும் விடுதிகளை ஒருங்கிணைக்க வேண்டும். விடுதிகளில் மாணவர்கள் தங்கி இருந்தால் அவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டும். விடுதி அல்லாமல் வீடுகளில் மாணவர்கள் தங்கி இருந்தாலும் அது தொடர்பான விவரங்களை பெற வேண்டும்.

அடிக்கடி மாணவர்கள் தங்கும் இடங்களில் சோதனை செய்ய வேண்டும். போதைப்பொருட்கள் உள்ளதா என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பல் தொடர்பாக போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுத்தால் பல்வேறு குற்ற செயல்களை தடுக்கலாம். சீனியர் மாணவர்கள் சிலர் கல்லூரி காலம் முடிந்தும் மீண்டும் ஏற்கனவே

தங்கியிருந்த வளாகங்கள் அல்லது ஜூனியர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் தொடர்ந்து தங்கி பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. படிப்பு முடித்தவர்கள் மாணவர்கள் தங்கும் விடுதியில், வீடுகளில் தங்கி இருந்தால் அது தொடர்பாக விசாரித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

One thought on “கல்லூரிகளிடம் அடாவடி மாணவர்கள் விவரம் கேட்கும் போலீசார்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *