பெண் உள்ளாடைகளை திருடிய சைக்கோ கும்பல்…
கோவை, சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எஸ் நகரில் உள்ள குடியிருப்புகளில்,வீட்டின் வெளியே துவைத்து காயப் போடப்பட்டு இருந்த பெண்களின் உள்ளாடைகள் மற்றும் உடைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மாயமாகி வந்தன.
ஒரே பகுதியில் அடுத்தடுத்து பெண்களின் ஆடைகள் மட்டும் காணாமல் போனதால், அப்பகுதி பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது, இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் அங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தனர். அப்போது, இதுவரை காணாமல் போன பெண்களின் உள்ளாடைகள் மற்றும் உடைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய குவியலாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்தச் சம்பவம் குறித்துச் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மொட்டை மாடியில் கிடந்த ஆடைகளைக் கைப்பற்றி, மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அல்லது பெண்கள் ஆடைகளை திருடும் சைக்கோ யாராது இந்த செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா கட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் வாலிபர் ஒருவர் உள்ளாடைகளை திருடி வந்து மொட்டை மாடியில் போடும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் ரகசியமாக சிலர் குறிப்பிட்டு விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உள்ளாடை திருடும் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவிட்டது
