கோவையில் ஓட்டு சாவடிகளில் சாமியானா, மருத்துவ குழு…
ஓட்டு சாவடி பைல் படம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் தயார் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இதில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பவன்குமார், தேர்தல் பிரிவு அதிகாரிகள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஓட்டு சாவடிகளை நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும். குடிநீர், கழிவறை, மின் விளக்கு, சாய்வு தளம் போன்றவை முறையாக செய்திருக்க வேண்டும். வாக்காளர்களை ஓட்டு போட அதிக நேரம் வெயிலில் நிற்க வைக்க கூடாது.
நிழற்கூரை வசதியில்லாத ஓட்டு சாவடிகளில் சாமியான பந்தல் போ! வேண்டும். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு, சர்க்கரை கரைசல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டு போட வரும் போது மயக்கம் போட்டு (விட்டால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவ உதவி குழு தயாராக இருக்க வேண்டும்.
ஓஆர்எஸ் பாக்கெட் வைத்திருக்க வேண்டும். ஓட்டு சாவடிகளின் சுற்றுப்பகுதிகளில் முட்புதர் செடிகள் இருக்கக் கூடாது. சுத்தம் செய்து நல்ல முறையில் பராமரித்திருக்க வேண்டும்.
வன எல்லைப் பகுதியில் உள்ள ஓட்டு சாவடிகளில் யானை மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறதா? என வனத்துறையினர் உதவியுடன் சோதனை செய்து பார்க்க வேண்டும். அபாய பகுதியில் உள்ள ஒட்டு சாவடிகளில் பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும்.
ஒட்டு சாவடிக்கு சென்று வரும் பாதைகளை சரி செய்ய வேண்டும். முறையான பராமரிப்பு இல்லாத ஓட்டு தொடர்பாக சாவடிகள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டு சாவடிகளுக்கு வரிசை எண், பாகம் எண் எழுத வேண்டும். ஓட்டு சாவடிகளை முறையாக பராமரிக்காத நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
