கோவையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது.

10 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்க இந்த கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. மேலும் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு படைகளை கண்டறிய அந்த வாகனங்களின் நடமாட்டத்தை ஜிபிஎஸ் மூலமாக அறிய டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது.

தினமும் ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்க முடியும். மேலும் கட்டுப்பாட்டு அறையில் 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண், 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

இது தவிர மீடியா கண்காணிப்பு பிரிவும் நேற்று துவக்கப்பட்டது. 10 கம்ப்யூட்டர் டிவி மானிட்டர் மூலமாக செய்தி சேனல்கள், சோசியல் மீடியாக்கள் மற்றும் பல்வேறு வெப்சைட்களில் தேர்தல் தொடர்பான தகவல்கள், பணம், பரிசு பொருட்கள், அரசியல் ரீதியான கருத்துக்களை கண்காணிக்கும் பணி நேற்று துவக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *