கோவையில் நெடுஞ்சாலை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு…

Chief reporter. kalaivanan 25/6/26.. 5 pm

கோவை ரேஸ்கோர்ஸ் ஜிஎஸ்டி அலுவலகம் அருகே கோவை சரக மாநில நெடுஞ்சாலைத்துறை துணை கண்காணிப்பு பொறியாளர் நித்திலன் என்பவரின் குடியிருப்பு உள்ளது.

இன்று காலை முதல் இவரது வீட்டில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். கடந்த 5 ஆண்டில் கோவையில் நடந்த கட்டுமானம், பராமரிப்பு பணி தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்தனர். நித்திலன் டெண்டர் விண்ணப்பங்கள், ஒதுக்கீடு பணிகளை கவனித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இவர் சில மாதங்கள் ஈரோட்டில் பணியாற்றியுள்ளார். கோவை சரகத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டில் விடப்பட்ட டெண்டர் நடந்த பணிகள், செலவிடப்பட்ட தொகை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில ஒப்பந்த நிறுவனங்கள் ‘செட்டிங்’ டெண்டர் என்ற வகையில் ஒப்பந்தபுள்ளி சமர்ப்பித்து பினாமியாக செயல்பட்ட நபர் மூலமாக பணிகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நபர் மூலமாக லஞ்சமாக பெறப்பட்ட தொகை அந்த தொகை யார் யாருக்கு பங்கு போட்டு வழங்கப்பட்டது.

அதில் வாங்கிய சொத்து, ஆவணங்கள் குறித்த விவரங்களை நித்திலனிடம் போலீசார் கேட்டனர். மேலும் இந்த முறைகேட்டில் உயர் அதிகாரிகள் கீழ் நிலை பொறியாளர்கள் பணத்தை பங்கு போட்டார்களா என விசாரித்தனர். கோவையில் கட்டுமானம், பராமரிப்ப கோட்டத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.

சரக அளவில் பல இடங்களில் பராமரிப்பு பணி செய்யாமல் செய்தது போல் கணக்கு காட்டியும், சேதம் அடையாக ரோடுகளை சேதமாக இருந்தது போல் காட்சி சீரமைப்பு பணி நடத்தியதாக காட்டியும் மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டில் போலியாக ரோடு போட்டதாக கணக்கு காட்டியிருப்பதாக கண்டறியப்பட்டது.

இதற்கான ஆவண ஆதாரங்களை போலீசார் சேகரிக்க இந்த சோதனை நடத்துவதாக தெரியவந்தது. நித்திலன் பினாமியாக செயல்பட்டு பல இடங்களில் ஒப்பந்த முறைகேடு செய்து விட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றசாட்டு தெரிவித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர் முன்னாள் திமுக அமைச்சர் எ.வ வேலுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா, லஞ்சம் வாங்கி குடுத்தாரா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் காலை முதல் விசாரணை தொடர்ந்து நடந்தது. போலீசார் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தங்களது வாகனங்களில் கொண்டு வந்த பார்சல் சாப்பாடு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது கோவை நெடுஞ்சாலைத்துறை, அரசு துறையினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *