கோவையில் கேண்டீன் உணவுகளில் புழு பூச்சி… நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம்.
கோவை மாவட்டத்தில் கல்லூரிகள் அதிகமாக இருக்கிறது. கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் தங்கும் விடுதிகள்
செயல்படுகிறது. இதில் கேண்டின் அமைக்கப்பட்டிருக்கிறது. தினமும் பல ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. இந்த கேண்டின்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் புழு, பூச்சி மற்றும் தர குறைபாடு பிரச்சனை இருப்பதாக அடிக்கடி புகார் வருகிறது. கோவை மாவட்டத்தில் 10க்கும் கல்லூரிகளில் உணவு குறைபாடு தொடர்பாக புகார் தரப்பட்டி ருக்கிறது.
இந்த கல்லூரி கேண்டின்களில் ஆய்வு நடத்தப்பட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. கேண்டின் உணவு புழு பூச்சி தொடர்பான வீடியோ பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மேலும் ஒரு கல்லூரியில் உள்ள கேண்டீனில் புழு பூச்சி இருப்பதாக புகார் தரப்பட்டது. மாணவர்கள் வாந்தி எடுத்த வீடியோ வெளியே வந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பள்ளி மாணவர்கள் விடுதி கேண்டீன்களிலும் இதுபோன்ற நிலை இருப்பதாக தெரிகிறது. கல்லூரிகளில் மாணவர்களிடம் உணவு கட்டணமாக பெரும் தொகை பெறப்படுகிறது. ஆனால் அந்த கட்டணத்திற்கு ஏற்ப உணவு தரமாக இருப்பதில்லை. வெளியே தங்கி படித்தால் கூட இந்த அளவிற்கு பரிதாப நிலையிருக்கிறது. கல்லூரி விடுதிகள் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும், உணவு தரமாக இருக்கும் என பெற்றோர் நம்புகின்றனர்.
ஆனால் கேண்டீன் உணவுகளால் மாணவ மாணவிகளின் உடல் நலன் கெட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவலம் இருக்கிறது. சுகாதாரமற்ற கேண்டீன்களை உணவு பாதுகாப்பு துறை மூட மறுத்து விட்டது. கேண்டீன் மூடினால் மாணவர்களுக்கு உணவு கிடைக்காது என நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் புழு பூச்சியுடன் மோசமான உணவு வழங்குவது தொடர்வதாக மாணவ மாணவிகள் புலம்பி வருகின்றனர்.

I love the bonus offers they have for new players. It gave me a great head start. Really happy I found bdl789.
Simple, clean, and effective. No unnecessary fluff, just straight to the fun. It is my go-to spot for relaxing and playing some games at jl555.
Love the bonuses they give to new players. It really helps to get started without risking too much of my own cash. Great vibes at kaviar88slot