கோவையில் இருந்து தப்பிய கைதி கேரளாவில் பதுங்கலா… தனிப்படை போலீசார் தேடல்
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன். இவர் மீது பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளது. ஈரோட்டில் ஒரு திருட்டு வழக்கில் போலீசார் ராகவனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதேபோல பெங்களூரில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக கர்நாடகா போலீசார் ராகவனை விசாரணைக்காக கர்நாடகாவுக்கு வேனில் அழைத்து சென்றனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே சென்றபோது ராகவன் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். பவானியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து கோவைக்கு கடந்த 30ம் தேதி இரவு அழைத்து வந்தனர்.
நள்ளிரவு 1 மணியளிவில் மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றபோது மீண்டும் போலீசாரை தள்ளிவிட்ட ராகவன் சிறை வளாகத்தில் இருந்து தப்பிச் சென்றார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகவனை பிடிக்க மாவட்ட மற்றும் மாநகர போலீசார் அடங்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படையினர் ராகவனை தேடி ஈரோடு, கேரளா என பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரம் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, “கைதி ராகவனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்தை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ராகவன் தப்பி ஒடி நஞ்சப்பா ரோட்டில் சென்று அந்த வழியாக வந்த லாரியில் ஏறி சென்றதாக தெரிகிறது,
அந்த லாரியின் எண்ணை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லாரியில் ஏறி எங்கு சென்றார்? என்பதை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், தனிப்படை ஈரோடு, கேரளா உட்படசில இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். ஓரிரு நாட்களில் கைதி ராகவனை பிடித்து விடுவோம்” என்றனர்.

Really impressed with the customer support here. They answered my questions almost instantly. Highly recommend giving bdjoya9official a shot.