கோவை அரசு மருத்துவமனையில் மக்கள் முற்றுகை…

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் சரியில்லை, எதுவும் சரியில்லை என கூறி அமைச்சர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் அவர்களிடம் முறையிட்டனர்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வன்னியரசு, சம்பத்குமார் ஆகியோர் இன்று வந்தனர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை சரியாக அளிப்பது இல்லை. டாக்டர்கள் சரிவர தகவலை சொல்வதில்லை என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

இதனை கேட்ட அமைச்சர்கள் மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, புகார் அளித்த நோயாளிகளிடம் தகவலை பெற்றுக்கொண்ட டீன் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தார்.

அப்போது, சின்ன மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த புஷ்பலதா என்பவர், தனது மகன் விஷ்ணுராம் சாலை விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு நடக்க கூட முடியாத நிலையில் இருக்கிறார். அவருக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. மருத்துவர்கள் அளிக்கும் மருந்தை கொடுத்தால் நீண்ட நேரம் தூங்கிவிடுகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் பவன்குமார் சம்மந்தப்பட்ட நபருக்கு மொபைல் யூனிட் மூலமாக வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளித்தனர். அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டனர். இவரை தொடர்ந்து மேலும் சிலர் அமைச்சர்களிடம் புகார் அளிக்க வந்த நிலையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

2 thoughts on “கோவை அரசு மருத்துவமனையில் மக்கள் முற்றுகை…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *