பிறவி குறைபாடு குழந்தைகளுக்கு RBSK மூலமாக சேவை…
தமிழ்நாடு முழுவதும் ராஷ்ட்ரிய பால் ஸ்வாஸ்த்யா கார்யாக்ராம்’ (ஆர்பிஎஸ்கே) திட்டத்தின்கீழ், பிறவி குறைபாடுடைய, 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காக மாவட்ட ‘தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 32 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 7 மாவட்ட மருத்துவமனைகள் என மொத்தம் 39 இடங்களில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பிறவியிலேயே குறைபாடுகள் அல்லது வளர்ச்சி தாமதம் உள்ள பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ஆரம்பகால சிகிச்சைகளையும், பயிற்சிகளையும் வழங்குகின்றன.
இந்த மையங்களில் ஒரே இடத்தில் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து சிகிச்சை, இயன்முறை மற்றும் செயல்முறை சிகிச்சை, உளவியல், நடத்தை மற்றும் புலன் உணர்வு சிகிச்சை, பிரத்தியேக பார்வை, கேட்டல் மற்றும் பல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மையமும் ஒருங்கிணைந்த, முழுமையான சேவைகளை வழங்குவதற்காக 12 உறுப்பினர்களை கொண்ட பிரத்தியேக மருத்துவ குழுவுடன் செயல்படுகிறது.
மேலும், குழந்தைகளின் சிகிச்சை விவரங்களை மையப்படுத்தும் முறையில் பதிவுசெய்ய நலம்’ இணையதளம் மூலமாக 39 மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையங்களின் பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருத்துவ குழுக்களால் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு குழந்தையின் தடையற்ற நிகழ்நேர பதிவு கண்காணிப்பு மற்றும் மருத்துவ மேலாண்மையை தடையின்றி கண்காணிக்கப்படுகிறது. மேலும், 7 முக்கிய பிறவி மற்றும் நாள்பட்ட குறைபாடுகள் உள்ளகாக கண்டறியப்படும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஆர்பிஎஸ்கே குழு மூலம் கடந்த 16 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 703 குழந்தைகளுக்கு பிறவி இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 3,141 குழந்தைகளுக்கு உட்டச்சத்து குறைபாடு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடியில் கடந்த 16 மாதங்களில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 113 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தவிர, பள்ளியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 837 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் பிறவிலேயே ஏற்படும் இதய நோய் பாதிப்பு 703 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 591 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 109 குழந்தைகளுக்கு
அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், 3 குழந்தைகள் தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், பிறவிலேயே ஏற்படும் வளைந்த பாகம் பிரச்னை 62 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில், 44 பேருக்கு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 18 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிறவி காதுகேளாமை 25 குழந்தைகளுக்கும், நரம்பு குழாய் குறைபாடுகள் 12, உதடு மற்றும் அண்ணம் பிளவு 16, ஊட்டச்சத்து குறைபாடு 3,141 குழந்தைகளுக்கும், பார்வை குறைபாடு 20,914 குழந்தைகளுக்கும் கண்டறியப்பட்டுள்ளன. இப்படி க கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகள் கோவை அரசு மருத்துவமனையில் செயல்படும் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையங்களின் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

Really impressed with the layout and how easy it is to navigate. It feels very professional and secure, which is exactly what I look for. idtuan88
The graphics and sounds make the whole experience so immersive. It feels like a real casino right in my room. Love richjili777!
The graphics are stunning and the gameplay is fluid. It is honestly one of the most polished apps I have used in a long time. Love 52betwinapp
This site has a really cool layout and the games load instantly. No more waiting around. Just visit pkbh999 and start winning.
Smooth experience and very user friendly. I love how quickly I can access my games through jljl5login. It makes gaming so much more convenient.