தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு இல்லை… அமைச்சர் விக்னேஷ் தகவல்

மதுபானங்கள் விலை உயர்த்தப்படவில்லை எனவும், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் ரூ.10 எம்ஆர்பி விலைக்குள் கொண்டு வரப்பட உள்ளது எனவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:

டாஸ்மாக் கடையில் காலி பாட்டில் விவகாரத்தில் கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் 99.9% பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக கோர்ட்டில் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கணக்கு காட்டாமல் கூடுதலாக வாங்கி உள்ளனர். ஆண்டுக்கு 480 கோடி மது பாட்டில் விற்பனையாகிறது.

தற்போதைய ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் ஒழிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேர வேண்டிய பணம் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதே மதுபானத்தின் எம்ஆர்பி விலையிலேயே பத்து ரூபாய் அடங்கும் திட்டத்தின் நோக்கம்.

விமர்சனங்களுக்குப் பயப்படாமல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக 4,048 ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள் வாங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எந்த பகுதியில் வாங்கிய பாட்டிலையும் வேறு பகுதியில் உள்ள கடைகளில் திருப்பிக் கொடுக்கலாம்.

டாஸ்மாக் ஊழியர்களின் நலனுக்காக ரூ.14 ஆயிரம் சம்பளத்தில் இருந்து 33 ஆயிரம் ரூபாய் வரை உயர்வு, வார விடுமுறை, மாதத்தில் இரண்டு நாள் விடுமுறை இலவச சீருடை, மருத்துவக் காப்பீடு ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சீருடையை கடைக்குள் மட்டும் அணிந்தால் போதும்.

வீட்டிலிருந்து வரும்போதும், வங்கிக்கு செல்லும்போதும் சொந்த ஆடைகளை அணியலாம். டாஸ்மாக் ஊழியர்களின் நேற்றைய வேலைநிறுத்தத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு திரும்ப வேண்டும். டாஸ்மாக் துறையை மீட்டெடுப்பதற்காக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

போராட்டத்கில் ஈடுபட்ட 960 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் தவறானது. காலி மதுபாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டத்தில் ரூ.10 திருப்ப பெறும் தொகை மட்டுமே எம்ஆர்பி விலைக்குள் கொண்டுவரப்பட உள்ளது. தற்போதையை இருப்பு தீர்ந்தவுடன் எம்ஆர்பி விலையில் மட்டுமே மதுபானங்கள் விற்கப்படும். அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடைகள் தரம் உயர்த்தப்பட்டு பில்லிங் ஒருபுறமும், விற்பனை ஒருபுறமும் இருக்கும்படி மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

3 thoughts on “தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு இல்லை… அமைச்சர் விக்னேஷ் தகவல்”

  1. Finding content that strikes the perfect balance between being detailed and remaining highly readable is a rare treat, so I wanted to drop a quick thank you for sharing this valuable summary with everyone today.

    pokies online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *