புலிகள் சென்சஸ் பணி தீவிரம்…

அகில இந்திய அளவில் புலிகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை பெரியநாயக்கன்பாளையம்,காரமடை, சிறுமுகை மேட்டுப்பாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள ஓடந்துறை,பெத்திக்குட்டை,கூத்தா மண்டி உள்ளிட்ட 50 இடங்களில் 100 தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் மற்றும் மற்ற வனவிலங்குகள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

வனவிலங்குகள் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதியை கடக்கும் போது அதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ தானாகவே பதிவாகிவிடும். வாரத்திற்கு ஒருமுறை சென்று பதிவாகியுள்ள போட்டோமட்டும் வீடியோக்களை சேகரித்து விட்டு அதற்கு பதிலாக மாற்று சிப் அந்த கேமராக்களில் பொருத்தப்படும். இவ்வாறு கேமராக்கள் மூலம் வனவிலங்குகளை கண்காணிப்பதன் மூலம் சிறுமுகை வனச்சரகப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்தும், என்னென்ன மாதிரியான வனவிலங்குகள் வசித்து வருகின்றன? என்பது குறித்த புள்ளி விவரங்கள் தெளிவாக சேகரிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

புட் நோட்

2 thoughts on “புலிகள் சென்சஸ் பணி தீவிரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *