மதுக்கரை அருகே நவக்கரையில் அரசு பஸ்களை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

கோவை வாளையார் பகுதியில் இருந்து உக்கடம் மற்றும் காந்திபுரம் பகுதிகளுக்கு 96, 48 போன்ற எண் கொண்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ்கள் முறையாக டைமிங் முறைப்படி இயக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது . காலையில் ஒரே நேரத்தில் மூன்று முதல் நான்கு பஸ்கள் இயங்கி வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர் . முறையான நேர விதிப்படி பஸ்களை இயக்க வேண்டும் என பலமுறை அவர்கள் தெரிவித்தும் பஸ் டிரைவர்கள் கேட்கவில்லை .

இந்த நிலையில் இன்று காலை நவக்கரை பஸ் ஸ்டாப் அருகே பொதுமக்கள் 4 பஸ்களை சிறை பிடித்தனர். டிரைவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். ஒரே நேரத்தில் ஒட்டுக்கா இப்படி வந்தா நாங்க எப்படி பஸ்ஸில் போயிட்டு வரது. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இப்படி பஸ்கள ஓட்றீங்க . எந்த புகார் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க. பள்ளிக்கூடத்திற்கு வேலைக்கு போயிட்டு வர ரொம்ப பிரச்சனையா இருக்குது என பொதுமக்கள் அவர்களிடம் முறையிட்டனர்.‌ பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் பஸ்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இது தொடர்பான வீடியோ பதிவுகளை எடுத்து வெளியிட்டனர். இது பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. அரசு பஸ்கள் முறையாக இயங்காமல் இருப்பது தொடர்பாக போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

4 thoughts on “மதுக்கரை அருகே நவக்கரையில் அரசு பஸ்களை சிறை பிடித்து மக்கள் போராட்டம்”

  1. I’ve been trying a few platforms lately and this one really stands out for its speed. Everything is smooth and easy to navigate. Definitely worth checking out ug234

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *